வியாதிகளும் துன்பங்களும் Louisville, Kentucky, USA 50-0100 1நான் ஒரு காரியத்தை விளக்க விரும்புகிறேன்... [Public address system-ன் காரணமாக ஒரு இரைச்சலான உரத்த சத்தம் (loud feedback noise) உண்டாகிறது - ஆசிரியர்.]... நீங்கள் அறிய வேண்டிய சில முக்கியமான காரியங்கள். என்னுடைய சத்தம் மிக உரத்த சத்தமாக இல்லை, எனவே நான் அநேகமாக இங்கே வர வேண்டியதாய் இருக்கிறது. கர்த்தர் அனுமதிப்பாராகில், ஞாயிறு பிற்பகல், ஞாயிறு பிற்பகலில், நான் உங்களிடம் ஒரு சுவிசேஷ செய்தியைப் பேச விரும்புகிறேன். இந்த வாரத்தில் கர்த்தர் நமக்காக சில மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காரியத்தைக் குறித்து... இங்குள்ள அநேகருக்கு இந்த ஜெப அட்டைகள் எவ்வாறு வியாதியஸ்தர்களுக்கும் அவதிப்படுகிறவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. மூன்று வருடங்கள் முயற்சி செய்ததில், உண்மையிலேயே தேவனுடைய ஆசீர்வாதத்தைப் போன்று காணப்பட்டதாக நான் எப்போதும் கண்டு கொண்ட ஒரே ஏற்பாடு இது மட்டுமே. 2முதலில் நாங்கள் உள்ளே சென்று, அட்டைகள் ஒன்றும் இல்லாமலே ஜனங்களை வரிசையாக நிற்க அனுமதித்தோம். அது அந்த அளவு மிகவும் நெருக்கமானதாக இருந்தது... பிறகு நான் ஒருக்கால் ஒரே சமயத்தில் பதினைந்து, இருபது நிமிடங்கள் ஜெபிக்க வேண்டியிருந்தது; கூட்டத்தினர் என்னை நெருக்கிக் கொண்டிருப்பார்கள், அவர்கள் என்னை வெளியே இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதன்பிறகு அடுத்ததாக, நாங்கள் ஜெப அட்டைகளை முன்கூட்டியே ஊழியக்காரர்களுக்கு - கூட்டத்தின் செலவை ஏற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் அனுப்பத் தொடங்கினோம், ஒருக்கால் தேசத்தின் எல்லா பாகங்களிலும் உள்ள ஐம்பது அல்லது அதற்கும் அதிகமான சபைகள் கூட்டத்திற்கான செலவை ஏற்றுக் கொண்டிருப்பர், மேலும் ஒவ்வொரு ஊழியக்காரரும் குறைந்தது நூறு அட்டைகளையாவது கொண்டிருப்பர். ஒவ்வொரு ஊழியக்காரரும் தம்முடைய சபையார் தான் முதலில் வர வேண்டுமென்று விரும்பினர். அவர் அவைகளை (ஜெப அட்டைகளை) தம்முடைய சபையோருக்கு வழங்குவார், அநேகமாக நான்கு அல்லது ஐந்து இரவுகள் முழுவதும், வெறுமனே ஒரு ஊழியக்காரரின் சபையினர் தான் உள்ளே வருவார்கள், மீதியுள்ளவர்கள் அதைக் குறித்து மிக மோசமாக உணருவார்கள். அதன்பிறகு நாங்கள் உள்ளூர் ஜனங்களைக் கொண்டிருப்பதைக் குறித்து எண்ணினோம், அப்படியே சமுதாயத்தில் உள்ள உள்ளூர் ஜனங்கள்; சிலசமயங்களில் ஜனங்கள் ஏழாயிரம், எட்டாயிரம் மைல்கள் போன்று அதிக (தூரத்திலிருந்து) கூட்டங்களுக்கு வருகிறார்கள். அது சரியல்ல. 3உண்மையாகவே... இருக்கக்கூடியதாக நாம் கண்டு கொண்ட ஒரே வழி என்னவெனில், கர்த்தரே வழியை உண்டாக்கட்டும், வந்து ஜெப அட்டைகளை எடுத்துச் சென்று, அவர்களில் ஏறக்குறைய ஐம்பது பேருக்கு, மற்றும் ஜனக்கூட்டத்திற்கு அவைகள் கொடுக்கப்படுகிறது, உள்ளே யார் இருக்கப் போகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. நான் ஐம்பது (ஜெப) அட்டைகளைக் கொடுத்து அவர்களில் ஒருவரையும் அழைக்காமல் இருந்த நேரத்தை நான் கண்டிருக்கிறேன். ஜெப அட்டைகளை ஒருபோதும் உபயோகிக்கக் கூடச் செய்யாமல், கூட்டத்திற்குள் தொடங்கி, இதைப்போன்று, கர்த்தருடைய ஆவியானவரே சரியாக ஜனங்கள் மத்தியில் என்னை வழிநடத்தினார். நான் மேடையில் உட்கார்ந்து, நான் அப்படியே பேசத் தொடங்கி, ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக என் சுயநிலையை முழுவதுமாக அப்படியே இழந்த நிலையில், முதலாவது நபரை அழைத்து, பிறகு அவ்விதமாக மற்றவரையும் அழைக்கும் நேரத்தையும் நான் கண்டிருக்கிறேன். நான்... அப்போது ஒவ்வொருவரும் சுகமடைந்து விடுவார்கள். அநேக ஜனங்கள் வரிசையில் வரும்படி அப்போது ஒன்றாகக் கூடினார்கள். நான் இந்தக் கருத்தை எடுத்துரைக்கிறேன்; இது உண்மை; இது ஐந்து வருடங்களாக நன்றாக உள்ளது... இப்பொழுது மூன்று வருடங்களாக. என்னை மன்னியுங்கள். இந்த மேடைக்கு வருகிற ஒவ்வொரு நபரும் சுகமடைகின்றனர். அங்கே ஒருபோதும் எதுவுமே இருப்பதில்லை, அது எவ்வளவு மோசமாக வளைந்த உறுப்புகளைக் கொண்டவர்களோ, முடவர்களோ அல்லது அவதிப்படுபவர்களாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, எப்போதுமே சுகமடைந்தனர். அங்கே சில பயங்கரமான வியாதியஸ்தர்களும் இருக்கின்றனர். ஆனால் நான்... ஒருக்கால், ஒரே இரவில், என்னால் ஒருவேளை மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து பேர்களைக் கொண்டு வரக் கூடியதாக இருக்கலாம். ஒருக்கால் சிலசமயங்களில்... 4ஒருமுறை கனடாவில் உள்ள கால்கரியில், இருவர் மாத்திரமே பெற்றதைக் கண்டேன், அங்கே 25,000 ஜனங்கள் கூடியிருந்தனர்: இரண்டு பேர். அதில் ஒருவன் பதினெட்டு வருடங்களாக அவதிப்பட்டு வந்த ஒரு பையனாக இருந்தான்; அவனுடைய கரமானது அவனுக்கு கீழாக இழுக்கப்பட்டிருந்தது. அவன் ஒரு சக்கர நாற்காலியில் இருந்தான். அவனைப் பராமரிக்கும்படி அவனுடைய தாயானவள் தன்னுடைய திருமண மோதிரத்தை அடகுவைத்திருந்தாள். அவன் சுமார் ஏழு அல்லது எட்டு கூட்டங்களில் இருந்திருந்தான், ஒரு (ஜெப) அட்டையும் ஒருக்காலும் பெற முடியவேயில்லை. கடைசியாக மேடையில் இருக்க வேண்டிய அவனுக்கான நேரமும் வந்தது. பையன் மேடையை விட்டு வெளியே நடந்தான். அடுத்த நாள் காலையில், தன்னுடைய ஜீவியத்திலேயே முதல் தடவையாக அவன் தானாகவே சவரம் பண்ணினான். விமானமானது வான்கூவரில் தரையிறங்கின போது, என்னுடைய கரத்தைக் குலுக்கும்படி, அங்கே வெளியே விமான படிக்கட்டில் என்னைச் சந்தித்தான். அடுத்தது அந்தச் சிறு பெண் பிள்ளையாக இருந்தது. விசுவாசத்தில் கத்தோலிக்களாயிருந்த அந்தச் சிறு பெண்ணின் ஒரு கால் மற்ற காலை விட நான்கு அங்குலங்கள் குட்டையாக இருந்தது. நாங்கள் சற்றே ஏறக்குறைய ஒரு மணி நேரமாக அச்சிறு பெண் பிள்ளையைக் கொண்டிருந்தோம். இந்த இதே வேதாகமம்... அவர்கள் அவளை அங்கே கொண்டு வந்த போது, அவள் அந்த பக்கமாக போய் விட்டாள். நான் இந்த வேதாகமத்தை அவளுடைய தலையின் மேல் வைத்தேன்; அவள் எந்தப் பிள்ளையும் போல அவ்வளவு சுகமடைந்தவளாக மேடையின் குறுக்காக முன்னும் பின்னும் நடந்தாள், 25000 ஜனங்கள் உட்கார்ந்து, பார்த்துக் கொண்டிருக்கும் போது. ஆனால் அக்காரியங்கள், நாம் வெறுமனே கூறுகிறோம்... 5இங்குள்ள யாரிடம் ஜெப அட்டை உள்ளதென்றோ அல்லது யார் முதலாவது இருப்பார்கள் என்றோ எனக்குத் தெரியாது. நாங்கள் அந்த அட்டைகளை விநியோகித்து விட்டு, பிறகு உள்ளே வருகிறோம். நான் முயற்சித்து ஒரு ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கிறேன். என்னுடைய சகோதரன், 'நான் 50 (ஜெப) அட்டைகளை விநியோகித்திருக்கிறேன்' என்று கூறுகிறார். நான் கட்டிடத்திற்குள் வருகிறேன்; நான் ஒரு சிறு பிள்ளையைச் சந்தித்து, 'உன்னால் எண்ண முடியுமா?' என்று கேட்கிறேன். அவன், 'ஆம், ஐயா' என்கிறான். நான், 'எண்ணத் துவங்கு' என்று கூறுகிறேன். அவன் ஒருக்கால் பத்து, பதினைந்து அல்லது இருபது வரை எண்ணி விட்டு, நிறுத்தி விடுகிறான்; அவன் எங்கு நிறுத்துகிறானோ, (அங்கிருந்து) ஜெப வரிசையைத் தொடங்குகிறேன். அவன் இருபதில் நிறுத்தியிருந்தால், நான் ஜெப வரிசையை இருபதில் தொடங்கி, ஒருக்கால் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ (கொண்டு) செல்லலாம். ஒருக்கால் அடுத்த இரவில், நான் ஒரு வரிசையிலுள்ள அநேக ஜனங்களை எண்ணி விட்டு, அதை இரண்டாகப் பிரித்து, அது என்ன எண் என்று பார்ப்பேன், அல்லது அதைப் போன்று ஏதோவொன்றைச் செய்வேன். 6இருப்பினும் ஜெப வரிசை எங்கிருந்து துவங்கும் என்று இன்றிரவு யாருக்குமே தெரியாது; அது அப்படியே எங்கு வேண்டுமானாலும் (துவங்குவது) போன்று காணப்படுகிறது. சிலசமயங்களில் அது சரியாக முடமானவர்கள் மத்தியில் சம்பவிக்கலாம். சிலசமயங்களில் அது வியாதியஸ்தர்கள் மத்தியில் சம்பவிக்கலாம். எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. நாங்கள் அப்படியே அட்டைகளைக் கொடுத்து விட்டு, மீதியானவற்றிற்காக கர்த்தருடைய வழிநடத்துதலை அனுமதிக்கிறோம், அந்த வழி எப்போதுமே வெற்றிகரமாக வேலை செய்தது. ஜெபத்தில் இருங்கள். 7இங்கிருக்கும் ஜனங்களாகிய உங்களுக்கு இதுவெல்லாம் புதிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் எப்பொழுதும் நடத்தியிருக்கிற எல்லா கூட்டங்களிலுமே, நான் ஊழியக்களத்தில் வந்தது முதற்கொண்டு நான் நடத்தியிருக்கிற எந்தக் கூட்டத்திலுமே இதுதான் மிகச்சிறிய இரண்டாம் இரவு கூட்டமாகும். வழக்கமாக, இரண்டாவது இரவில், எந்த அரங்கத்திலும், அல்லது விளம்பரம் செய்யப்பட்ட எந்த வழியிலும், வழக்கமாக இரண்டாவது இரவில் 7000, 8000, 10000 பேர் வந்திருப்பார்கள். நிச்சயமாக, இது வெறுமனே உள்ளுரில் தான் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச விளம்பரத்தின் காரணமாக தான் கும்பலாகக் கூடும்படி செய்து விடுகிறது, ஒரு மாநிலத்திலிருந்தோ, மற்ற மாநிலங்களிலிருந்தோ வருகிற அநேக நூற்றுக்கணக்கானவர்கள் தான் கூட்டமாக ஆகி விடுகிறார்கள். இதற்குப் பிறகு எனது அடுத்தக் கூட்டம் ஹாஸ்டனில், பொது விளையாட்டுகள் நடக்கும் அரங்கில் இருக்கும். அதில் 17,000 இருக்கைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன், அவ்வாறு தான் நான் நம்புகிறேன். அது ஏற்கனவே ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து சர்வதேச செய்தித்தாள்களில் இருக்கிறது. அங்கு தான், கடலுக்கு அப்பாலிருந்தும் மற்றும் எல்லாவற்றிலிருந்தும், எல்லாவிடங்களிலிருந்தும் ஜனங்கள் வருகின்றனர்...?... இன்றிரவு அப்படியே சிறிது வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. என்னுடைய வார்த்தையோ தவறிப் போய் விடும்; அவருடைய வார்த்தை தவறிப் போகாது. அது சங்கீதம் 103, 1-வது, 2-வது, 3-வது வசனங்களில் காணப்படுகிறது. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, தேவன் தாமே தம்முடைய வார்த்தையில், தமது ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. இவை எல்லாவற்றிலுமிருந்து 'வியாதிகளும் துன்பங்களும்' என்பதின் பேரில் பேசுகிறேன், அது சம்பந்தமாக சில விவரங்களை அப்படியே சிறிது நேரம் கொடுக்கும்படி விரும்புகிறேன். நீங்கள் கவனித்துக் கேட்கும்படியும், அதற்கு உங்கள் சிதறாத கவனத்தை செலுத்தும்படியும் நான் விரும்புகிறேன். 8வியாதிகள் துன்பங்கள் எல்லாமே பாவத்தின் விளைவுகள் தான், அது ஒருக்கால் உங்களுடைய ஜீவியத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு முன் யாரோ ஒருவருடைய ஜீவியத்தில் இருக்கலாம். பிசாசு தான் வியாதிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆக்கியோன் ஆவான். நாம் எந்த பிசாசையும் கொண்டிருக்கும் முன்பு, நாம் எந்த வியாதியையும் அல்லது துன்பத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் சாத்தான் வந்தபோது, அவன் வியாதிகளையும் துன்பங்களையும் அவனுடன் கொண்டு வந்து விட்டான். நாம் அநேக நேரங்களில் அவைகளை ஆசீர்வாதங்களாகக் குறிப்பிடுகிறோம். தேவன் ஒரு வியாதியுள்ள நபரை விட்டு, அது ஒரு பாவியாக இருந்தாலன்றி, ஒரு ஆசீர்வாதத்தையும் எடுத்து விடக் கூடும் என்று என்னால் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியவில்லை, அவனை தேவனிடம் துரத்துவதற்கும் அல்லது கீழ்ப்படியாத ஒரு பிள்ளையை திரும்பவும் தன்னுடைய தகப்பனிடம் ஒப்புரவாகும்படி கொண்டு வருவதற்குமே (வியாதிகளை அனுமதிக்கிறார்). ஆனால் வியாதிகள் பிசாசினுடையதாகவும் விழுகையின் விளைவாகவும் இருக்கிறது. அங்கே... நாம் எப்போதும் கொண்டிருந்ததிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களை இன்று நாம் கொண்டிருக்கிறோம். நாம் எப்போதும் கொண்டிருந்ததிலேயே மிகச்சிறந்த மருத்துவ விஞ்ஞானத்தையும் மிகச்சிறந்த மருத்துவமனைகளையும் நாம் பெற்றிருக்கிறோம்; மேலும் நாம் எப்போதும் கொண்டிருந்ததைக் காட்டிலும் அதிகமான வியாதிகளையும் நாம் பெற்றிருக்கிறோம். நாம் எப்போதும் கொண்டிருந்ததிலேயே மிகச்சிறந்த மருத்துவ விஞ்ஞானத்தை நாம் பெற்றிருக்கும் இந்த நாளில், அவர்கள் குணப்படுத்த முடியாத (வியாதிகளுக்காக - தமிழாக்கியோன்) ஆராய்ச்சி நிலையங்களை இடைவிடாமல் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வியாதிகளுக்காகவும் துன்பங்களுக்காகவும் நாம் எப்போதும் கொண்டிருந்ததிலேயே மிகச்சிறந்த விஞ்ஞான சாதனை(களை) நாம் பெற்றிருக்கும் போதே; நாம் குணப்படுத்த முடியாதவைகளுக்காக வருடந்தோறும் மருத்துவமனைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். 9ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை முந்திக் கொண்டு ஒருபோதும் எதுவுமே வந்ததில்லை, ஆனால் அதற்கு ஒப்பானவராக இருப்பதைக் காட்டிலும் அவர் மேலானவராக இருந்தார். அவர் நேற்று இருந்ததைப் போலவே இன்றும் மாறாதவராக இருக்கிறார், அவர் என்றும் அவ்வாறே இருப்பார். அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். இரவுக்குப் பின் இரவாக நீங்கள் அதைக் காண்பீர்கள். அது அவ்வாறு இல்லாமலிருந்தால், அதை சந்தேகிக்க உங்களுக்கு உரிமை உண்டு. யாரோ ஒருவர், 'சுகமடைதல் நீடித்திருக்குமா?' என்று கேட்டார். விசுவாசம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறதோ அவ்வளவு காலம் அவைகளும் நிலைத்திருக்கும். ஆனால் விசுவாசம் தோல்வியடையும் போது, அப்போது உங்களுடைய சுகமும் தவறிவிடும். பீடத்தண்டையில் வந்த ஒவ்வொரு நபரும் மனந்திரும்பி, தங்கள் நாட்களெல்லாம் ஒரு கிறிஸ்தவனாக இருப்பார்களென்று நீங்கள் கூறுவீர்களா? அவன் இன்றிரவு ஒரு தேவ பிள்ளையாகவும், நாளை ஒரு பிசாசின் பிள்ளையாகவும் இருக்க முடியும். அவன் தேவனிடத்திலுள்ள விசுவாசத்தை இழக்கும் போது, அதுதான் அவனைத் திருப்பி அனுப்புகிறது. 10இங்கே இந்த மேடையில் உங்களை சுகப்படுத்தக் கூடிய எந்த வல்லமையும் உங்களை சுகத்தில் நிலைத்திருக்கச் செய்ய முடியும். நான் இந்த விவரணத்தை அளிப்பதற்கு அதுதான் காரணம், இங்கே (உங்களை) விடுவிக்கும் அதைத் தவிர இங்கே எதுவும் வருவதில்லை. இதற்கு வெளியே அதில் (சுகத்தில்) நிலைத்திருக்க வேண்டுமானால் அது உங்களுடைய விசுவாசத்தைப் பொறுத்தது. முழுவதும் குருடாயிருக்கும் ஜனங்கள் மேடையில் வருவதை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் இந்த இதே வேதாகமத்தை வாசித்திருக்கிறார்கள். ஐந்து நாட்களை விடவும் குறைந்த காலத்தில், அவர்கள் எப்பொழுதும் இருந்ததைப் போல அப்படியே குருடாகி மீண்டும் திரும்பி வருவார்கள். அவர்கள் இங்கே ஏன் வாசித்தார்கள்? அந்த தேவனுடைய வரத்தை பிசாசினுடைய வல்லமை அடையாளம் கண்டு கொண்டு விட்டது, அவன் போய்த்தான் ஆக வேண்டியிருந்தது. இப்பொழுது, அது ஒரு... அது ஒரு... செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது உண்மை தான் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், சுகமளித்தலுக்குரிய அவருடைய வல்லமையையும் நான் அறிவேன். 11நான் போனிக்சில் இருந்த போது, கொஞ்ச காலத்திற்கு முன்பு, யாரோ ஒருவர் சொன்னார். ஜெப வரிசைகள் அந்த தெருக்கள் வழியாக இருந்தன; அவர்களால் அந்த அரங்கத்திற்குள் கூட வர முடியவில்லை. வரிசையில் சென்று கொண்டு, யாரோ ஒருவர், 'சகோதரன் பிரன்ஹாமே, அங்கே அந்த எல்லா காரியங்களுக்கு முன்பாக நிற்க உங்களுக்கு பயமில்லையா? அந்தக் குற்றம் கண்டுபிடிப்பவர்களும், பத்திரிகை நிரூபர்களும் மற்றவர்களும் குற்றம் கண்டுபிடிக்கும்படி அங்கே நின்று கொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் உணரும் போது நீங்கள் பயப்படுவதில்லையா?' என்று கேட்டார். நான், 'அவர் அருகில் இருப்பதாக நான் உணரும் சமயம் வரை நான் பயப்படுவதில்லை. ஆனால் நான் அவரை உணர முடியவில்லை என்றால், நான் மேடையை விட்டு விலகி வீட்டிற்குப் போய் விடுவேன்' என்றேன். எந்த மனிதனாலும் எதுவுமே செய்ய முடியாது. எல்லாம் தேவனிடமிருந்து வர வேண்டியதாயிருக்கிறது. 12உதாரணமாக, நாம்... புற்று நோயைக் குறித்து சற்று நேரம் பேசும்படியாக அதை எடுத்துக் கொள்வோம். அது இன்றுள்ள பெரிய சத்துருக்களில் ஒன்றாக இருப்பதாக காணப்படுகிறது. ஒரு புற்று நோய் என்பது என்ன? அது எங்கிருந்து வருகிறது? கட்டி, கண்படல நோய், அல்சர், நிம்மோனியா, காசநோய் இந்தப் பெயர்கள் எல்லாம் மருத்துவ விஞ்ஞானத்தினால் கொடுக்கப்பட்ட மருத்துவ பெயர்கள் தான். வேதாகமமோ அவைகள் பிசாசுகளாக இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகிறது. உதாரணமாக, புற்றுநோய், ஒரு புற்று நோய் என்பது என்ன? அது வழக்கமாக ஒரு கன்றிப்போன காயத்திலிருந்து வருகிறது (புற்றுநோயானது, ஒரு உயிரணுவானது அடிக்கப்பட்டு அது உடையும் போது அதிகப்படியாக அந்தக் காயத்திலிருந்து வருகிறது - தமிழாக்கியோன்). 13பூமியிலுள்ள இயற்கையான காரியங்கள் அனைத்துமே ஆவிக்குரியதற்கு மாதிரியாயுள்ளன. இயற்கையில் உள்ள ஒவ்வொன்றுமே ஆவிக்குரியதற்கு மாதிரியாயுள்ளன. உங்களுக்கு அது தெரியும், பெரும்பாலும் உங்கள் எல்லாருக்குமே தெரியும். 14உதாரணமாக, ஒரு குழந்தை பிறக்கும் போது உள்ளதைப் போன்று, ஒரு பிள்ளையானது தேவனிடத்தில் பிறக்கும் போது. ஒரு குழந்தையானது, ஒரு பிள்ளையானது தேவனுடைய இராஜ்யத்தில் பிறக்கும் போது... வேதாகமம், 'பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' என்று கூறுகிறது. (யாரோ ஒருவர் அநேக தடவைகள் கூக்குரலிட்டு அழுகிறார் - ஆசிரியர்.) இப்பொழுது, யாரோ ஒருவர் வியாதியாய் இருக்கிறார் அல்லது ஏதோவொன்று, எனவே அப்படியே உங்கள் கவனத்தை எனக்கு செலுத்துங்கள். நீங்கள் இந்தக் காரியங்களை இழந்து போவீர்களானால், நீங்கள் அநேகமாக அதோடுகூட உங்கள் சுகத்தையும் இழந்து விடுவீர்கள். 15'பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர்.' இப்பொழுது நாம்... நம்முடைய மனமாற்றத்தின் போது... இயேசு கிறிஸ்து மரித்த போது, அவருடைய சரீரத்திலிருந்து அடிப்படை கூறுகள் வந்தன; அங்கே ஜலம், இரத்தம், ஆவி ஆகியவை இருந்தன, இந்த மூன்று காரியங்களும் புதுப்பிறப்பை செய்கின்றன. ஊழியக்காரர்களே, அது சரிதானா? இந்த மூன்று அடிப்படை கூறுகளும் புதுப்பிறப்பை செய்கின்றன: ஜலம், இரத்தம், மற்றும் ஆவி. ஒரு குழந்தை பிறக்கும் போது, அதுவே இயற்கையான பிறப்பை உண்டாக்குகிறது... முதலாவது காரியம் என்ன? ஜலம், இரத்தம், ஜீவன். எல்லா இயற்கையான காரியங்களும் ஆவிக்குரியவைகளுக்கு மாதிரியாயுள்ளன. 16இயற்கையில் ஒரு புற்று நோய் என்பது... ஆவிக்குரிய ரீதியில் அவன் ஒரு பிசாசாக இருக்கிறான். அவன் அழுகிய பொருட்களை தின்று வாழும் விலங்கிற்கும், இறந்த விலங்குகளை தின்று வாழும் ஒரு பறவைக்கும் மாதிரியாக இருக்கிறான்: மரித்த காரியங்களைத் தின்னுதல். புற்றுநோயானது ஒரு கன்றிப்போன காயத்திலிருந்து (bruise) வருகிறது. உதாரணமாக, என்னுடைய கரத்தில், அதில்-அதில்-அதில்-அதில் எந்த புற்றுநோயும் கிடையாது. ஒரு சமயத்தில் அதில் புற்றுநோய் காணப்படலாம். நல்லது, ஒரு புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது என்ன, ஒரு... என்னுடைய சரீரத்திலுள்ள ஏதோவொரு செல், ஜீவ அணு பின்மாற்றமடைகிறது, காயப்படுகிறது, அல்லது ஏதோவொன்று சம்பவிக்கத் துவங்குகிறது. அந்த ஜீவ அணு அல்லது செல்லிலிருந்து, செல்கள் பெருகத் தொடங்கி, வளர்ந்து பெருகி, அது ஒரு புற்றுநோயை உருவாக்குகிறது, அது சரீரத்திற்குள் தின்ன ஆரம்பிக்கிறது. 17இப்பொழுது, ஒவ்வொரு ஜீவனும், அங்கேயுள்ள ஜீவனின் ஒவ்வொரு சிறு பகுதியும், ஒரு ஜீவ அணுவிலிருந்தே வந்தன - வருகின்றன. நீங்கள் தாமே ஒரு ஜீவ அணுவிலிருந்து வந்தவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் வந்தீர்கள்; ஒரு சமயம் நீங்கள் அப்படியே ஒரு மிகச்சிறிய ஜீவ அணுவாக இருந்தீர்கள், இயற்கையான கண்ணால் காணமுடியாத அளவிற்கு மிகச்சிறியது. நீங்கள் உங்கள் தகப்பனிடமிருந்து வந்தீர்கள். உங்களுடைய தாயின் இரத்தமானது உங்களில் எதுவுமேயில்லை. இரத்த உயிரணுவானது ஆணிடமிருந்தே வருகிறது. பிறகு அந்த ஜீவ அணுவிலிருந்து, செல்கள் பெருகுகின்றன. ஒவ்வொன்றுக்கும் அதனுடைய இனம் உள்ளது: நாயிடமிருந்து வரும் ஒரு ஜீவ அணுவானது நாயையும், ஒரு பறவையிடமிருந்து வரும் ஜீவ அணுவானது ஒரு பறவையையும், ஒரு மனிதனிடமிருந்து வரும் ஜீவ அணுவானது ஒரு மனிதனையும் பிறப்பிக்கும். அதை எதுவும் குறுக்கிடச் செய்யவில்லை என்றால், தேவனுடைய திட்டத்தை எதுவும் குறுக்கிடச் செய்யவில்லை என்றால், அது ஒரு பரிபூரண ஆரோக்கியமான பிள்ளையைப் பிறப்பிக்கும். அதை எதுவும் குறுக்கிடவில்லை என்றால், அது ஒரு பரிபூரணமாக ஆரோக்கியமான முழு வளர்ச்சியடைந்த நபராக வளரும். ஆனால் ஏதோவொன்று அதைக் குறுக்கிடும் போது, அது நிச்சயமாக தேவனுடைய திட்டத்தை குறுக்கிடும் தீயவைகளாக இருக்கும்படியாக (ஆகி) விடுகிறது. தேவன் உங்களை வியாதியஸ்தராய் இருக்கும்படி நோக்கம் கொள்ளவில்லை. தேவன் உங்களைத் தம்முடைய சாயலில் உண்டாக்கினார். நீங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அவர் உங்களை சுகமாகவே வைத்திருக்கும்படியான ஒவ்வொன்றையும் அவர் செய்திருக்கிறார். 18சாத்தான் உங்களுக்கு விரோதியாய் இருக்கிறான். எனவே, இந்தப் புற்றுநோயை அல்லது இந்தக் கட்டியை, அது என்னவாக இருந்தாலும் அதை அவன்-அவன் ஆரம்பிக்கிறான்; அவன் பெருகத் தொடங்கும் ஒரு ஜீவ அணுவிலிருந்து வருகிறான், ஒரு கட்டி வேகமாக தொற்றிப் பரவுவது போல, (மேலும்) மற்றவைகள். நீங்கள் ஒரு சரீரத்தை உடையவர்களாக இருப்பது போல, அப்படியே அதுவும் ஒரு சரீரமாக இருக்கிறது. நீங்கள் ஆவியாக இருப்பது போல அப்படியே அதுவும் ஒரு ஆவியைக் கொண்டிருக்கிறது; அதற்கு ஆத்துமா மாத்திரம் கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு ஜீவனைக் கொண்டிருப்பது போல அதற்கும் ஒரு ஜீவன் உண்டு. எனவே, பிறகு, உங்களில், உங்கள் மாம்சத்தில், இரண்டு ஜீவன்கள் இருக்கின்றன. ஒன்று நீங்கள், மற்றொன்று வேறொரு ஜீவிக்கின்ற ஒன்று, நீங்கள் ஒரு சரீரத்தில் வளர்ந்தது போல அப்படியே செல்கள் பெருகி, ஒரு சரீரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது சரியா? நல்லது பிறகு, எது அதைச் செய்கிறது? பிசாசு. -அந்த ஜீவ அணுவானது ஒரு ஜீவனாக இருக்கிறது. முதலாவது, ஜீவ அணு என்பது அதில் ஒரு ஜீவனைக் கொண்ட மிகச் சிறிய ஒரு செல் ஆகும். அந்த ஜீவனானது இரண்டு மூலக்காரணர்களிடமிருந்து மாத்திரமே வர முடியும்: தேவனிடமிருந்தோ அல்லது பிசாசிடமிருந்தோ தான் வர முடியும். நீங்கள் தேவனால் ஜீவ அணுவிலிருந்து வந்தீர்கள். புற்றுநோய், கட்டி, அல்லது மற்றவைகள் பிசாசின் மூலம் ஜீவ அணுவிலிருந்து வருகின்றன. அவன் உங்களுடைய ஜீவனை அழிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் உங்களுடைய இரத்த ஓட்டத்தை தின்னுகிறான், மேலும்-மேலும் அவன் வித்தியாசமான வழிகளில் உங்கள் மேல் கிரியை செய்கிறான். எனவே, அவைகள் பிசாசுகளாய் இருக்கின்றன என்று நான் அறிவேன். இயேசு கிறிஸ்து அவைகளை பிசாசுகள் என்று அழைத்தார். அவர் கூறுவது சத்தியமாக உள்ளது. அவைகள் பிசாசுகளே. பிசாசு ஒரு வேதனைப்படுத்துகிறவனாக இருக்கிறான். அவனால் கூடுமானால், அவன் உங்கள் சரீரத்தை கிழித்தெறியவும் உங்களைத் தின்னவும், உங்களை அழிக்கவும், உங்களுடைய 70 வருட (three score and ten) ஆயுசு நாட்களைக் குறுகிப்போக பண்ணவுமே அவன் இங்கே இருக்கிறான். 19அதன் காரணமாகத்தான் இந்த தேவ தூதன் நான் இருக்குமிடத்திற்கு இறங்கி வரும்போது... உங்களில் எவரைக் குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் உங்களுடைய சரீரத்தில் நீங்கள் என்ன வகையான வியாதியைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் உங்களிடம் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், ஏனெனில் அந்த ஜீவனானது அதைப் பகுத்தறியும்படிக்கு தேவன் அனுப்பியிருக்கிற ஜீவனின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. அப்போது உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் செய்திருக்கிற காரியங்கள், அப்போது தேவனுடைய வல்லமையினாலே தான் அது அங்கே இருக்கிறதா அல்லது அது போய் விட்டதா என்று என்னால் கூறு முடிகிறது. சரீரத்தில் தெரியும் விளைவுகளின் மூலமாக உங்களால் அதைக் காண முடிகிறது. நோயாளியின் சரீரமானது நேராகி, சுகமடையும் போதோ அல்லது அவரின் கண்கள் திறக்கப்படும் போதோ அல்லது அவரின் காதுகள் கேட்கப்படும் போதோ உங்களால் அந்த நோயாளியைக் காண முடிகிறது. 20இப்பொழுது, அது என்ன? நீங்கள் இங்கேயிருக்கிற இச்சிறு பையனைப் போன்ற ஒரு மனிதனிடம் நீங்கள் கூறலாம், அல்லது அதைக் காணும்படியாக ஒரு சில இரவுகளுக்கு முன்பு உங்களில் சிலர் கூடாரத்தில் இருந்தீர்கள் என்று நம்புகிறேன். அந்த 'சிகாகோ உரிமைக்காவலன் (Chicago Tribune)' (இது ஒரு அமெரிக்க தினசரி செய்தித்தாள் - தமிழாக்கியோன்) செய்தித்தாளானது ஒன்பது ஊமையர்களை எங்கே கொடுத்தார்கள் என்பதைக் குறித்த ஒரு படம் இதோ இங்கே இருக்கிறது, அவர்கள் அங்கே வெளியே அமர்ந்திருந்தார்கள், அவர்கள் அந்த மருத்துவ சங்கத்திலிருந்து வந்திருந்தார்கள், அவர்கள் பிறவியிலேயே செவிடர்களாயும், ஊமையர்களாகவும் இருந்தார்கள், அவர்களில் ஒருவர் செவிடராகவும், ஊமையராகவும், குருடராகவும் இருந்தார்கள். இப்பொழுது, ஒருக்கால் மேலாளர்களில் சிலர் அந்த விவரங்களை உங்களுக்கு வாசித்துக் காட்டியிருக்கிறார்கள். இப்பொழுது, அந்த ஜனங்கள், 'சிகாகோ உரிமைக்காவலன்' போன்ற செய்தித்தாள்கள் மதவெறித்தனங்களாக இருப்பவை அல்ல. அது அல்லது, 'வாச்சிகன் சன்', அல்லது 'போஸ்ட் டிஸ்பேட்ச்' அல்லது அந்தச் செய்தித்தாள்கள் எதையும் போன்ற ஒரு செய்தித்தாளில் அந்தக் காரியங்களை பிரசுரிப்பதற்கு முன்பு அவைகளை முழுமையாகவும் முற்றிலுமாகவும் பரிசோதித்துப் பார்த்து விட வேண்டியதாய் இருக்கிறது. அது ஒரு மத வெறித்தனம் அல்ல. அது ஒரு உணர்ச்சியைத் தூண்டும் காரியமோ, புராண நம்பிக்கையோ, அல்லது ஒரு கோட்பாடோ அல்ல. அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. இன்றிரவும் அதை உறுதிப்படுத்தும்படிக்கு அவர் இங்கே இருக்கிறார், அவர் அதைச் செய்வார். விரைவில் நம்முடைய கூட்டத்தார் ஒரே சிந்தையோடும் ஒரே இருதயத்தோடும் ஆகி விடுகிறார்கள்... இந்த - இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த ஜனக்கூட்டத்தார், அநேகமாக இன்றிரவு ஜெபிக்கப்பட வேண்டியவர்கள், மேடைக்கு வந்து, அவர்கள் ஒரே இருதயத்தோடும் ஒரே இசைவோடும் இருப்பார்களானால், அடுத்த வெறும் ஐந்து நிமிடங்களில், இந்த சக்கர நாற்காலிகளிலோ அல்லது கட்டில்களிலோ அவர்களில் ஒருவருமே இருக்க மாட்டார்கள். இதுவே சத்தியம் என்று அவர்கள் விசுவாசிப்பார்களானால்... இன்றிரவு ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மேடைக்கு வருகையில்; அவர்கள் ஒவ்வொருவருமே, அந்த சக்கர நாற்காலிகளை விட்டும் cra - கட்டில்கள் மற்றும் காரியங்களை விட்டும் வெளியே வந்து, இந்த மேடையை விட்டு சுகமடைந்தவர்களாக நடந்து போகாதிருப்பார்களானால், நான் தவறாயிருக்கிறேன் என்று உங்களால் கூற முடியும். 21(அப்படியானால்) திரும்பிப் போகும்படி தேவனிடம் கூறி விடுவேன், யார், அவர் தவறிப்போகாதவர். நீங்கள் சுகமடைந்து விடுவீர்கள். இப்பொழுது, அவருடைய வார்த்தையை நன்மையானதாகச் செய்யும்படியாக அவர் இங்கே இருக்கிறார். தேவன் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக உள்ளன. ஆனால் நீங்கள் அதை அரைகுறையாக விசுவாசிக்க வேண்டாம்; நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். சில ஜனங்கள் வந்து, 'நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறலாம். அவர்கள் விசுவாசிப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் தான் உண்மையில் விசுவாசிக்கிறார் என்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். 'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.' 22நம்முடைய சரீரமானது ஐம்புலன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் கரத்தைப் பார்ப்போம். ஐந்து புலன்கள்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல், அவைகள் தான் இயற்கையான மனிதனை கட்டுப்படுத்துகிறது. இப்பொழுது, உள்ளில் வேறொரு மனிதன் இருக்கிறான், அது அந்த விசுவாச மனிதன், ஆவி. அவன் இரண்டு புலன்களைக் கொண்டிருக்கிறான்: அவைகளில் ஒன்று விசுவாசம் மற்றது அவிசுவாசம். அது தேவனுடைய பரிபூரண எண்ணை உண்டாக்குகிறது, ஏழு, நீங்கள் கொண்டிருக்கும் புலன்கள். இப்பொழுது, பெரும்பாலும் இங்கேயிருக்கும் உங்களில் எவராவது நிச்சயமாக உங்களுடைய ஐந்து புலன்களைக் கொண்டு தாம் கூறுவது உண்மை தான் என்று உறுதியாகக் கூறலாம். இப்பொழுது, சற்று நேரம் இதைக் கவனியுங்கள். 23Dr.காபிள் அவர்களே, சற்று நேரம் இங்கே நின்று கொண்டிருப்பீர்களா? இப்பொழுது, ஒரு சிறு பல வண்ணக் கட்டம் போன்ற சூட்டை அணிந்துள்ள ஒரு மனிதர் எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன்; அவர் ஒரு சிவப்பு கழுத்தணியும் கண்ணாடிகளையும் அணிந்திருக்கிறார். நான் சரியாக இருக்கிறேன் என்று எத்தனை பேர் நினைக்கிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்க்கட்டும்? நல்லது, அங்கே ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் நீங்கள் அவரைக் காண்கிறீர்கள். அது சரியா? இப்பொழுது, அங்கே யாரோ ஒருவர் நின்று கொண்டிருக்கிறார் என்று இப்பொழுது என்னிடம் கூறுகிறதாக என்னிடம் இருக்கிற ஒரே புலன், ஒரே வழி அதுதான், ஏனென்றால் நான் அவரைக் காண்கிறேன். பார்வையானது அவரை அறிவிக்கிறது. நல்லது, இப்பொழுது நான் அவரைக் காணவில்லை, ஆனால் அவர் அங்கு தான் இருக்கிறார் என்று நான் இன்னும் நம்புகிறேன். (சகோ. பிரன்ஹாம் தம்முடைய தலையை சகோ. காபிள் அவர்களிடமிருந்து அப்பால் திருப்புகிறார், ஆனால் அவரைத் தொடுகிறார் - ஆசிரியர்.) இப்பொழுது நீங்கள், 'கூறுவது தான் நம்புதல்' என்று கூறலாம். அப்படியா? இப்பொழுது அங்கே டாக்டர். காபிள் நின்று கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன், நான் அவரைக் காணவில்லை. ஏனென்றால் நான் பார்வைக்கு வெளியே ஒரு தனிப்பட்ட புலனை உடையவனாயிருக்கிறேன்; அது உணர்ச்சி என்று அழைக்கப்படுகிறது, அவர் அங்கே இருக்கிறார் என்று நான் உணருகிறேன். அது டாக்டர். காபிள் என்று எனக்குத் தெரியும். அது டாக்டர். பாஸ்வர்த் அல்ல. ஏனென்றால், டாக்டர். காபிள் தம்முடைய கரத்தில் ஒரு சிறிய (பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாட்டை - Testament) வைத்திருந்தார், அது இன்னும் அங்கே இருக்கிறது. எனவே ஒருமுறை அந்த வாக்குமூலத்தை நான்-நான் கூறினேன், யாரோ ஒருவர் வேறு யாரோ ஒருவரை மேலே என்னிடத்தில் ஏறி வரப்பண்ணினார். ஆனால் டாக்டர். காபிள் தம்முடைய கரத்திலே இந்தச் சிறிய வேதாகமத்தை வைத்திருந்ததைக் கவனித்தேன், அது தான் டாக்டர். காபிள். இப்பொழுது அவர் அங்கே நின்று கொண்டிருந்தார் என்று நான் கூறக்கூடிய ஒரே வழி என்னவென்றால், உணருதல் என்ற புலனின் மூலமேயாகும். அது உண்மை என்று நான் அறிவேன். 24ஆனால் இப்பொழுது நான் அவரை உணரவேயில்லை. அந்த புலனானது எனக்கு மரித்ததாக இருக்கிறது, ஆனால் அவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் அவரைக் காண்கிறேன். நான் எதைப் பற்றிக் கூறுகிறேன் என்பது புரிகிறதா? அவர் அங்கே இருக்கிறார் என்று கூறுகிற இந்த சரீரத்தின் இரண்டு வேறுபட்ட புலன்கள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று: நான் அவரைக் காண்கிறேன், அடுத்த ஒன்று, நான் அவரை உணருகிறேன். இப்பொழுது அங்கே சம்பவிக்கிறது... சகோதரனே, அங்கே ஒரு நிமிடம் அப்படியே நின்று கொண்டிருங்கள். 25இப்பொழுது, நான் வேறொரு புலனைக் கொண்டிருக்கிறேன், அதுதான் கேட்பது. ஏதாவதொன்றைப் பற்றிய ஏதோவொரு இசையை வாசியுங்கள் (பியானோவில் இசை வாசிப்பவர் வாசிக்கத் துவங்குகிறார் - ஆசிரியர்.) அங்கே இசை வாசிக்கப்படுகிறது என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அந்த இசையை எத்தனை பேர் காண்கிறீர்கள்? நீங்கள் அதை முகருகிறீர்களா? அதை ருசிக்கிறீர்களா? அதை உணருகிறீர்களா? நல்லது, அது இசை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் உடையதாயிருக்கிறீர்கள்... இப்பொழுது இங்கேயுள்ள யாரோ ஒருவருக்கு கேட்கும் புலன் இல்லாமல் இருந்தால் என்னவாகும்? அந்த இசை வாசிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது; அந்தப் புலனானது அவர்களுக்கு மரித்துள்ளது. அவர்களால் அதைக் கேட்க முடியாது, ஏனென்றால் அவர்களால் கேட்க முடியாது. ஆனால் ஒரு கேட்கும் புலனைக் கொண்டிருக்கும் நீங்கள் அது இசைக்கப்படுவதை அறிகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். உங்களால் அதைக் காண முடியவில்லை, உங்களால் அதை உணர முடியவில்லை, நீங்கள் அதை முகர முடியவில்லை, நீங்கள் அதை ருசிக்க முடியவில்லை, ஆனால் உங்களால் அதைக் கேட்க முடிகிறது. இப்பொழுது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின், ருசிக்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின், அல்லது கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ஆனால் விசுவாச புலனானது உங்களுடைய பார்வையைப் போன்றோ அல்லது உங்களுடைய மற்ற எந்த புலனையும் போன்று அப்படியே உண்மையாக உள்ளது. நான் என்ன கூற விரும்புகிறேன் என்று காண்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் அப்படியே... நீங்கள் அதைச் சந்தேகப்படும்படி செய்ய யாராலும் முடியாது, ஏனென்றால் அது அவ்வாறு உள்ளது என்று உங்களிடம் கூறுகிற அந்தப் புலனை நீங்கள் உடையவர்களாயிருக்கிறீர்கள். 26நீங்கள், 'அந்தச் சட்டை வெள்ளை நிறத்தில் இருந்தது' என்று கூறியிருந்தீர்கள். அது சிவப்பாக இருந்தது என்று நான் உங்களிடம் கூறியிருந்தால் என்னவாகும்? நல்லது, நீங்கள் அதை விசுவாசிக்க மாட்டீர்கள், ஏனென்றால் அது வெள்ளை நிறத்தில் இருக்கிறது. உங்களுடைய பார்வை புலனானது அது வெள்ளை நிறம் தான் என்று கூறுகிறது. உங்கள் கண் அவ்வாறு கூறுகிறது. நல்லது, இப்பொழுது நீங்கள் விசுவாசித்தால், இங்கே ஜெபிப்பதற்காக இருக்கும் நீங்கள், நீங்கள் யாராக இருந்தாலும், இன்றிரவு நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று விசுவாசித்தால், அந்தச் சட்டையானது வெள்ளை நிறத்தில் உள்ளதென்று கூறும் உங்களுடைய பார்வை அப்படியே எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அந்த கிரியையும் சரியாக இப்பொழுதே செய்யப்பட்டிருக்கும். டாக்டர், காபிள், உமக்கு நன்றி. அது சரியே. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாத, ருசிக்கப்படாத, உணரப்படாத, முகரப்படாத, அல்லது கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அது வேறொரு புலனாகும். அது வேறொரு ஆதிக்கத்தில் இருக்கிறது. அது இயற்கையான எதுவும் அல்ல. 27விசுவாசத்தினாலே மாத்திரமேயன்றி, உங்களால் தேவனிடமிருந்து எதையும் கொண்டிருக்க முடியாது. விசுவாசத்தினால், எரிகோவின் மதில்கள் விழுந்தன. விசுவாசத்தினாலே மோசே பார்வோனின் குமாரத்தியின் மகன் என்று அழைக்கப்படுவதை மறுத்து விட்டான். விசுவாசத்தினாலே கிதியோன் இன்ன இன்னதைச் செய்தான். ஒரே வழி, விசுவாசத்தினாலே தான்... விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். நீங்கள் அவரைப் பிரியப்படுத்த விரும்பினால், நீங்கள் கட்டாயம் அவரிடம் விசுவாசத்தோடே வந்து, அவருடைய வார்த்தை சத்தியம் என்று விசுவாசிக்க வேண்டும். 28நான் நின்று கொண்டு, இந்த வார்த்தைகளை அறிவித்துக் கொண்டு, வியாதிகளைக் கண்டறிந்து, அந்த வியாதிகளையும், இருதயங்களின் இரகசியங்களையும் கூறாதபடிக்கு இந்த மேடைக்கு எதுவுமே வர முடியாது என்று ஏன் கூறுகிறேன்? அது எவ்வளவு மோசமாக முடமாகிப் போயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் சுகமடைந்து விட்டார்கள் என்று ஒவ்வொரு முறையும் அறிவதே அல்லாமல், வேறு கூட்டங்களில் யாருமே இருந்ததில்லை. ஏன்? தூதன் என்னைச் சந்தித்து, அவர், 'ஜனங்கள் உத்தமமாயிருக்கும்படி நீ செய்வாயானால்...', அல்லது, 'நீ உத்தமமாயிருந்து, ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்வாயானால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்காது' என்றார். நான் அதை விசுவாசிக்கிறேன். கென்டக்கியிலுள்ள லூயிவில்லிலே, நீங்கள் அதே காரியத்தைச் செய்யும்படி என்னால் செய்யக் கூடுமானால், இதற்கு முன்பு ஒருபோதுமே இருந்திராததைப் போன்ற ஒரு குலுக்கப்படுதலைக் கொண்டிருப்பீர்கள். அது ஒரு சவாலாக இருக்கிறது. 29ஆனால் இன்றிரவு நான் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், நான் எதைப் பற்றிக் கூறுகிறேன் என்பதை நீங்கள் காணும்படி செய்வதற்குத் தான் நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியானால், நீங்கள் இங்கே வந்து, விடுவிக்கப்படும் போது, சரியாக அந்த வார்த்தையின் பேரில் நில்லுங்கள். அவர்-அவர் நீங்கள் அறிக்கை பண்ணுகிற பிரதான ஆசாரியராய் இருக்கிறார். தேவன் இருக்கிறார் என்று முதலாவது நீங்கள் அறிக்கை செய்யும் மட்டுமாக தேவனால் உங்களுக்கு எதுவுமே செய்ய முடியாது. அப்படியானால் நீங்கள் அதை அறிக்கை செய்து, பிறகு அதை விசுவாசித்து, அதன்பேரில் கிரியை செய்து, அதனோடு தரித்திருக்கும் போது, தேவன் உங்களுக்கு அதைக் கொண்டு வருவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உண்மையாக. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேய்னில்... 30டாக்டர். பாஸ்வர்த் அவர்களே, தற்செயலாக, நான் ஒரு சிறு வாக்குமூலத்தை அங்கே என்னுடைய மேல் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறேன், அவர்கள் அதை உம்மிடம் கொண்டு வருவார்கள், அது நாம் சற்று முன்பு வெளியே கொண்டிருந்த அந்தக் கூட்டத்தைப் பற்றியது, அதில் 'ஜனங்களாகிய நாம்' என்று இருக்கிறது. அது ஒரு சிறிய குருடான பெண் பிள்ளை என்று நம்புகிறேன், அவர்கள் அதை வெளியிட்டிருந்தனர். இப்பொழுது அது 'ஜனங்களாகிய நாம்' என்பதில் வரப்போகிறது, அது உலகத்தின் ஒவ்வொரு பாகங்களுக்கும் போகிற ஒரு புத்தகமாயிருக்கிறது, அது குற்றப்படுத்தி அறிக்கை எழுதியிருந்த ஒரு செய்தித்தாள் நிருபருடையதாயிருக்கிறது, அவர், 'அந்தச் சிறு பெண் சுகமடைந்து விட்டாள் என்று உரிமை கோரினாள், அவளோ சுகமடையவே இல்லை' என்று கூறியிருந்தார். அந்தச் சிறு பெண் பிள்ளை, மருத்துவர்களின் அறிக்கைகளையும், அதைப் போன்ற மற்ற காரியங்களையும் வைத்திருந்தாள், அதை வெளியிட்டனர். அதன்பிறகு அவர்கள் அதைப் பரிசோதித்துப் பார்த்தனர், இப்பொழுது அது 'ஜனங்களாகிய நாம்' -ல் கூட சென்றிருக்கிறது. தேவன் அசைவாடுவார், ...செய்யக்கூடிய யாருமே கிடையாது. அதை உங்களுக்காக திரு.பாஸ்வர்த் அவர்களை வாசிக்கச் செய்வேன், ஒருக்கால், நாளை பிற்பகல் ஆராதனையில் அவர் அதைச வாசிப்பார். அது அங்கே மேலே இருக்கிற ஃபோர்ட் வேய்ன் செய்தித்தாள் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. 31திருமதி. பாஸ்வர்த், அவர்கள் போய்க் கொண்டிருந்த கூட்டங்களில், அவர்களில் சிலர் கூறிக் கொண்டிருந்தார்கள்... அங்கே ஒரு மனிதன் பத்து வருடங்களாக சரீரத்தின் அநேக இடங்களில், சரீரத்தைக் கடினமாக்கி சொரசொரப்பாக மாற்றும் ஒரு வியாதியுடனும் (multiple sclerosis), பக்கவாதத்தினாலே பாதிக்கப்பட்டும், உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுடைய முடக்குவாதமானது ஊடுருவி அவனுடைய முதுகெலும்பிற்குள்ளும் வந்தது. அவன் பட்டணத்து வியாபாரியாக இருந்தான். அவர்களுக்கு... தெரியாதிருந்தது. அவன் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்களிடம் இருந்தான். சக்கர நாற்காலிகளில் உள்ள அநேகரும், அவதிப்படும் ஜனங்களும் விடுதலையடைந்ததை அவர்கள் கண்டிருந்தனர். அவ்விரவு, மாறுகண் பார்வையுடைய ஒரு சிறு பெண் பிள்ளை கட்டிடத்தின் பின்பக்கத்தில் இருந்து, அநேக ஜனங்கள் மாறு கண்ணிலிருந்து விடுவிக்கப்பட்டதை கண்டிருந்தாள். மேடைக்கு எப்பொழுதாகிலும் வந்த மாறுகண் பார்வையுடைய எந்தப் பிள்ளையும் சுகமடைந்ததைத் தவிர வேறெதையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆறுமாத காலங்களை விடவும் குறைவான காலத்தில் 300 பேர்களை விடவும் அதிகமான மாறுகண் பார்வையுடைய வியாதியஸ்தர்கள் சுகமடைந்ததை நான் கண்டிருக்கிறேன். நாங்கள் அதைக் குறித்த ஒரு ஆவணத்தை வைத்திருந்தோம். வியாதியஸ்தரின் 40,000 சாட்சிகளை சுகமடைந்த தேதியுடனும், மருத்துவரால் கையெழுத்திடப்பட்ட சாட்சிகளுடனும் மற்றவைகளுடனும் வைத்திருந்தோம். 32ஜனங்களே, அந்த வேளையானது இதோ உள்ளது. இங்கே அந்நேரம் இருக்கிறது. நான் இதைக் கூறுகிறேன், நீங்கள் விரும்பினால், நீங்கள் என்னை ஒரு மத வைராக்கியம் பிடித்தவன் என்று முத்திரை குத்தக்கூடும். இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சுட்டிக் காட்டுகிறது என நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அங்கே அடையாளங்களும் அற்புதங்களும் இருக்கும். அதைக் குறித்த காரியம் என்னவென்றால், நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் இல்லாமலிருந்தால், அதற்குள் உந்தித்தள்ளிக் கொண்டு சென்று விடுங்கள். நான் பேசிக் கொண்டிருப்பதைக் குறித்து நிச்சயமாகவே கொஞ்சம் அறிவையாவது கொண்டிருப்பேன், அல்லது தேவன் செய்கிறவைகளைச் செய்யும்படிக்கு அவர் என்னுடைய ஜெபத்தை ஒருபோதும் கனம் பண்ண மாட்டார். நீங்கள் இராஜ்யத்துக்கு வெளியே இருக்கிறீர்கள், தருணமுள்ள போதே, நீங்கள் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போதே, இப்பொழுதே உங்களுடைய அடைக்கலமாக கிறிஸ்துவைத் தேடுங்கள். நான் கூறப்பட்ட ஒரு காரியத்தை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். ஒருசமயம் நான்... ல் நின்று கொண்டிருந்தேன். 33இதற்கிடையில், ஃபோர்ட் வேய்னில் அந்தச் சிறு பெண் பிள்ளையைக் குறித்து உங்களிடம் கூறிக் கொண்டிருந்ததை முடித்து விடுகிறேன். திருமதி. பாஸ்வர்த் என்னிடம் கூறினார்கள். 'தேனே...' என்றார்கள். அவர்கள் கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னால் புத்தகங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறு பெண் பிள்ளை அங்கே வெளியே வந்து, அழுது கொண்டே, 'திருமதி. பாஸ்வர்த்' என்றாள், அது சகோதரன் பாஸ்வர்த் அவர்களின் மனைவி. 'மாறுகண் பார்வையுடைய அந்த எல்லா ஜனங்களும் சுகமடைந்ததை நான் கண்டேன்' என்று கூறினாள். அவள் பயங்கரமாக மாறு கண் பார்வையை உடையவளாக இருந்தாள், அவள் ஏறக்குறைய 18 வயதான ஒரு வாலிப பெண்ணாக இருந்தாள். 'நீங்கள்... என்னால் அங்கே உள்ளே போக முடிந்து, அந்த ஜெப வரிசையில் என்னால் போக முடியுமானால்... ஆனால் எனக்கு ஒரு ஜெப அட்டை கூட கிடைக்க முடியவில்லையே' என்றாள். திருமதி. பாஸ்வர்த்தின் இரக்க உணர்வு அந்தப் பிள்ளையிடமாகச் சென்றது. அவள், 'தேனே, நீ அவரைக் காணக்கூடிய இடத்தில் சரியாகச் சுற்றிலும் திரும்பி நடப்பாயானால், உண்மையாகவே... இப்பொழுது வெறுமனே கற்பனை செய்யாதே - அவ்வாறு செய்யாதே, ஆனால் அது ஒரு தேவனுடைய வரம் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, அவர் உன்னை ஒரு சில நிமிடங்களில் அழைப்பார் என்று நான் உறுதியாக உன்னிடம் கூறுகிறேன்' என்று கூறினார்கள். 34நான் அந்த சிறு பெண்ணிற்கு என்னுடைய முதுகைத் திருப்பின விதமாக, மேடையின் மேல் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, விசுவாசம் அசையத் தொடங்குவதை உணர்ந்தேன். அப்போது நான் சுற்றும் முற்றும் நோக்கினேன், என்னால் அதை அடையாளம் காண முடியவில்லை; அங்கே அநேகர் மிகவும் நெருக்கிக் கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தனர். அது அங்கேயிருந்து வந்து கொண்டிருந்ததை அறிந்து கொண்டேன். அது என்ன வகையான ஒரு ஆவி என்பதை பகுத்தறிய நான் முயற்சித்தேன். பாருங்கள், அவளுடைய விசுவாசமானது அந்த ஜனக்கூட்டத்திற்குள் மேலான நிலைக்கு உயர்ந்து சென்றிருந்தது. நான் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த போது, கடைசியாக அவளைக் கண்டுபிடித்தேன். ஓ, இந்தக் கட்டிடத்தின் தூரத்தைப் போன்று இரண்டு மடங்கு தூரம், அவள் இருந்த இடத்தை அடையாளம் கண்டு கொண்டேன். அவள் ஒரு பச்சை நிற மேலாடையை அணிந்திருந்தாள். நான், 'மாறுகண் பார்வையுடன், பச்சை மேலுடையை அணிந்து, அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கும் வாலிப பெண்ணே, இனிமேலும் பயப்பட வேண்டாம். தேவன் உன்னைக் குணமாக்கி விட்டார்' என்றேன். அவளுடைய கண்கள் பரிபூரமாக சுகமானது. அது அவ்விதமாக சம்பவித்த ஆயிரக்கணக்கான வியாதியஸ்தர்களில் வெறுமனே ஒன்று தான். இப்பொழுது, நாம் கூட்டத்தைக் கொண்டிருக்க முடிந்து, ஜனங்கள் ஒன்று கூடி, இது, அது என்று நீங்கள் நினைக்கிறதை தூக்கி எறிந்து விடக்கூடுமானால், அதை அப்படியே ஒருபுறமாக எறிந்து விடுங்கள். வெறுமனே பார்வையாளராக வர வேண்டாம். வந்து, விசுவாசித்து, அந்த அதே காரியங்கள் சரியாக இங்கே கட்டிடத்திலேயே சம்பவிக்கவில்லையா என்று பாருங்கள். 35நான் இங்கிருக்கும் டாக்டர். பாஸ்வர்த் அவர்களை முதல் தடவை சந்தித்த போது, அது மியாமியில் தான். நாங்கள் கூட்டத்தைக் கொண்டிருந்தோம். டாக்டர். பாஸ்வர்த் அவர்கள் சர்வதேச அளவில் அறியப்பட்டவர், தெய்வீக சுகமளித்தலை 40 வருடங்களாக போதித்த அனுபவமுடையவர். தேவன் ஏதோவொரு நாளில் சபைக்கு இந்த வரத்தை அனுப்புவார் என்று அவர் எண்ணினார். பிறகு நான் அங்கிருந்ததை அவர் கேள்விப்பட்ட போது, அவர், 'நல்லது, அது மீண்டும் அங்குள்ளது, அப்படியே யாரோ ஒருவர் தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்' என்று வெறுமனே எண்ணினார். அவர் ஒரு இரவு கூட்டத்திற்கு வந்தார். கூட்டத்தினூடாக வந்து கொண்டிருந்தார்... அவர்கள் துரிதமான வரிசை என்று அழைப்பதை நாங்கள் கொண்டிருந்தோம்; ஆயிரக்கணக்கானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அன்று பிற்பகல், பிறவிக் குருடான இரண்டு சிறு பையன்கள் WBAY ஒலிபரப்பு நிலையத்தில் வைத்து பேட்டி காணப்பட்டனர். அவர்கள் இருவருமே தங்களுடைய பார்வையைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் இவர்களை அங்கே ஒலிபரப்பு நிலையத்தில் வைத்து பேட்டிக் கண்டனர். எனவே சகோதரன் பாஸ்வர்த் கூட்டத்திற்கு வந்தார். அந்த துரிதமான (ஜெப) வரிசை ஆரம்பித்த போது, அவ்விரவு அங்கே பல்லாயிரக்கணக்கானோர் கடந்து செல்ல நேர்ந்தது, வந்து கொண்டிருக்கும் அவர்களில் நான்கு பேர் மீது ஒன்று சேர்ந்தாற் போல் அப்படியே கரங்கள் வைக்கப்பட்டதைத் தவிர வேறொன்றும் செய்யப்படவில்லை. 36அவர்கள் ஒரு சிறு பெண்ணினூடாக நெருக்கித் தள்ளினார்கள். நான் அந்தப் பிள்ளையை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அவள் ஒரு நேர்த்தியான சிறு பெண். அவள் இளம் பொன்னிற தலைமயிரை உடைய ஒரு சிறு பெண்ணாக இருந்தாள், ஒரு பல் முன்னால் வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. அவளிடம் ஒரு சிறு புதிய கைவிரல் நக ஒப்பனைக் கலையை (manicure) அவளுடைய தலை மயிரில் வைத்திருந்தாள், அல்லது ஸ்திரீகள் தங்களுடைய தலை மயிரில் வைக்கும் அந்தக் காரியங்களை நீங்கள் எவ்வாறு அழைக்கிறீர்களோ அதை வைத்திருந்தாள். அவர்கள் அவளை நெருக்கித் தள்ளினர்... அவள் ஊன்று கோலில் இருந்தாள், அவளுடைய - அவளுடைய சிறு இடுப்பு இங்கேயிருந்தது. அவர்கள் வரிசையினூடாக அவளை நெருக்கித் தள்ளினர், நான் அவள் மேல் கரங்களை வைத்தேன். அவள் மேடையை விட்டு போனாள், அவர்கள் அவளைப் பின்னால் வரிசையில் நெருக்கித் தள்ளினர். ஏன், அந்தச் சிறிய பரிதாபமான பெண்... அவள் தொடர்ந்து அதனூடாக வந்து கொண்டிருந்தாள். அப்போது யாரோ ஒருவர் அதனூடாக அவளை அழைத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் அவள் மேல் கரங்களை வைத்தனர். அவள் மீண்டும் அதனூடாகக் கடந்து செல்கையில், அவள் மேலே நோக்கிப் பார்த்தாள், அந்தப் பற்கள் வெளியே தெரியும்படியாக அம்மாதிரியான ஒரு சிறு புன்னகை செய்தாள், நீங்கள் அறிவீர்கள். மேலும் ஏதோவொன்று அப்படியே, 'அந்தப் பிள்ளையை நிறுத்து' என்றது. நான், 'தேனே...' என்றேன். அவள் அச்சமயத்தில் சுகமாக்கப்படுவதற்கான விசுவாசத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டேன். 37ஆனால், பாருங்கள், அதற்காகத்தான் அந்த வரம் உள்ளது. இங்கே மேடையின் மேல், சில சமயங்களில் அவர் எப்படியாக இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள், நீங்கள் கிரியை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஜனங்கள், 'ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் விசுவாசிக்கிறேன்' என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் இதோ இங்கே கீழே இருக்கிறார்கள்; அவர்கள் இங்கே மேலான நிலையில் தான் இருக்க வேண்டும். நல்லது, பிறகு அவர்களுடைய வியாதிகளையும் அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களையும் கூறுவதைப் பற்றிய அந்தக் காரியங்கள், நான் அந்த நபர் என்னை விசுவாசிக்கும்படி செய்வது வரையில் விசுவாசமானது அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதைத்தான் அவர் சொன்னார், 'ஜனங்கள் உன்னை நம்பும்படி செய்து, நீ ஜெபிக்கும் போது உத்தமமாயிருந்தால், அப்போது எந்த அசுத்த ஆவியும் அங்கே பிடித்துக் கொண்டிருக்க முடியாது' என்றார். அவன் எஜமானை அறிய வேண்டியுள்ளது. அப்போது... அவர் அதை என்னிடம் கூறினார் என்பதை நான் அறிவேன். அந்த வியாதியஸ்தர்களின் விசுவாசமானது இதற்கு வரும்வரை, ஒரு நிலைக்கு மேலே வரச் செய்யக் கூடும் போது, அதுதான் எனக்கு ஒரு பரிபூரண விசுவாசத்தைக் கொடுக்கிறது. அது தவறிப் போனதை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. அது ஒருக்காலும் தவறிப் போவதேயில்லை. அது தவறிப் போக முடியாது. 38பிறகு அந்தப் பெண்ணை அவர்கள் அதனூடாக நெருக்கித் தள்ளினபோது, நான், 'தேனே, நீ சரியாக எனக்குப் பின்னால் நின்றுகொள்' என்றேன். அவள் அங்கே பின்னால் நின்று கொண்டாள், அப்படியே அவளைப் பிடித்துக் கொண்டு; அவள் என்னுடைய கோட்டின் பின்பகுதியைப் பிடித்துக் கொண்டாள். நான், 'தேனே, நீ ஜெபம் பண்ணு' என்றேன். அவள் தன்னுடைய சிறு தலையைக் கீழே தாழ்த்தியவாறு ஜெபித்துக் கொண்டிருந்தாள். சகோதரன் பாஸ்வர்த், இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கூர்ந்து கவனித்துக் கொண்டும், அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார், அவருக்கு இன்னும் கொஞ்சம் சற்று சந்தேகம் இருந்தது. அவர் கவனித்துக் கொண்டிருந்தார், ஏனென்றால் அவர் அங்கே வெளியே இருந்தார், அவர் அப்படியே போய்க் கொண்டிருந்த கூட்டத்தின் முடிவைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவள்... அது கடைசி இரவாக இருந்தது, அப்படித்தான் என்று நம்புகிறேன். அவள் என்னுடைய கோட்டைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள், நான் அப்படியே தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்தேன். நான் அந்தப் பிள்ளையைக் குறித்தே மறந்து விட்டிருந்தேன். நான் மீண்டும் சுற்றிலும் திரும்பினேன்; நான், 'தேனே, தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிரு' என்றேன், அதைப் போன்று. 39சிறிது நேரம் கழித்து, அந்த விசுவாசமானது ஒரு இதயத் துடிப்பைப் போன்று, பம்ப், பம்ப், பம்ப் என்று வரத் தொடங்கினதை நான் உணர ஆரம்பித்தேன். அது ஆரம்பித்த போது... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... அவ்விதமாகப் போய், நான் அவளிடமாக சுற்றிலும் திரும்பினேன். நான், 'இப்போது, இனிய இருதயமே' என்றேன், நான் அவள் மேல் என் கரங்களை வைத்து கர்த்தராகிய இயேசுவிடம் கேட்டேன். நான் தாயாரிடம் கூறினேன், நான், 'இப்பொழுது, அந்த ஊன்று கோல்களை அவளை விட்டு எடுத்து விடுங்கள்' என்றேன். அவளோ, 'ஆனால், சகோதரன் பிரன்ஹாமே, நான் உம்மிடம் கூறுகிறேன், அவள்...' என்றாள். நான், 'உ-ஊ, சீமாட்டியே, நீங்கள் அதைச் சந்தேகிக்காதீர்கள். உங்களிடம் செய்யும்படி சொல்லப்பட்டதை நீங்கள் செய்யுங்கள்' என்றேன். அவள் அங்கே மேலே நடந்து சென்று, அந்தப் பிள்ளையை விட்டு ஊன்று கோல்களை எடுத்து விட்டாள். அவள் அந்தப் பெரிய ஊன்று கோல்களைப் பிடித்துக் கொண்டு, பரிபூரணமாக சுகமடைந்தவளாய், அப்படியே எவ்வளவு ஆரோக்கியமாக அவள் இருக்க முடியுமோ அப்படியாக, அந்தச் சிறு கால்கள், அவள் இங்கே திரும்பி அந்த ஜனங்களினூடாக அவ்விதமாகக் கீழே வந்தாள். அது சரியா, டாக்டர். பாஸ்வர்த் அவர்களே? தொடர்ந்து கூட்டத்தில் வந்து கொண்டிருந்தார். சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள், நான் பிடித்து வைத்து விட்டேன்... 40ஓ, இந்தக் கட்டிடத்தைப் போன்று, இரண்டு மடங்கு தூரம், அல்லது ஒருக்கால் அதைக் காட்டிலும் அதிக தூரம் இருக்கலாம், அந்தப் பெரிய சர்க்கஸ் கூடாரத்தின் கீழே ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர், அங்கே வெளியே பின்னால் பிரின்ஸஸ் கார்டன்ஸில் நெடுஞ்சாலைகள் முழுவதுமாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தனர். அதன்பிறகு பின்புறத்திலும், நான் தொடர்ந்து அதைச் செய்து கொண்டிருந்தேன்... மீண்டும் ஏதோவொன்று, 'வியூ, வியூ' என்று வரத் தொடங்கினதை நான் உணர்ந்தேன். அது விசுவாசம் என்று நான் அறிந்து கொண்டேன். அது எங்கிருந்து வந்து கொண்டிருந்தது என்று என்னால் கூற இயலவில்லை. நான் தொடர்ந்து திரும்பி நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன்; ஆனால் ஜனங்கள் மிகவும் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தனர், அவர்கள் அழுது கொண்டும், உங்களையும் காரியங்களையும் தொட முயற்சித்துக் கொண்டும் இருந்தனர். சிறிது நேரம் கழித்து, நான் அதைக் கண்டு பிடித்து விட்டேன், அது பின்னால் வழியில் பின்புற இடத்தில், ஒரு வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்த மனிதனாக இருந்தது. எவ்வகையான ஆவி அவரைக் கட்டியிருந்தது என்பதைக் கண்டுபிடிக்கும்படி நான் காத்திருந்தேன். அம்மனிதன் முடமானவனாய் இருந்தான். அவன் அதற்கும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு குதிரையிலிருந்து கீழே விழுந்திருந்தான். அவன் மியாமியில் ஒரு வியாபாரியாக இருந்தான். அவனுடைய கரமானது ஊனமுற்றதாக மேல் நோக்கி இருந்தது, இதைப் போன்று அவனுடைய கரமானது காணப்பட்டது. அவன் கூட்டத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படிக்கு ஒரு குற்றம் கண்டு பிடிப்பவராக வந்திருந்தான். பிறகு அவன் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினான். நான் நிறுத்தி விட்டு, நான், 'ஐயா, பின்னால் வழியில் இந்த வழியாகப் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும் வரிசையிலிருந்து நாலாவதாக, வெள்ளைச் சட்டை அணிந்திருக்கும் நீங்கள், உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கி இருக்கிறார்' என்றேன். அவர் எழுந்து நின்ற போது, அங்கே அவருடைய கைகள் மேலே உயர்த்தப்பட்டன. தன்னுடைய சரீரத்தில் ஒப்பனை செய்திருந்த அவருடைய சிறிய மனைவி, இக்காலையில் அந்தச் சிறிய சகோதரன் தம்முடைய ஒளிபரப்பில் கூறினது போல, அவள் கூச்சலைக் கேட்டிருப்பீர்களானால், அவள் ஒரு பரிசுத்த உருளை என்று தான் நீங்கள் நினைத்திருப்பீர்கள். அங்கே அவன் பரிபூரண விடுதலை பெற்றவனாக இருந்தான். 41சகோதரன் பாஸ்வர்த் அந்தக் கேஸை (case) அலசி ஆராய்ந்த பிறகு, அவர் என்னிடம் வந்தார். அவர் அந்த மனிதனிடம் அதைக் குறித்த எல்லாவற்றையும் கேட்டார். அவர் இதை இந்தவிதமாக கண்டுகொள்ள வந்த போது, அவர் சொன்னார், என்னிடம் கேட்டார், 'அதுதான் அந்த மனிதன் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டார். நான், 'ஐயா, நான் பெலவீனம் அடையத் தொடங்குகிறேன். அது எங்கேயோவிருந்து வந்து கொண்டிருந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன்' என்றேன். அவர் சொன்னார், அவர் ஒலிப்பெருக்கியிடம் வந்து, அவர், 'அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. அது அதை நிரூபிக்கிறது' என்று கூறினார். அவர், 'இப்பொழுது, இயேசு கிறிஸ்துவில் இருந்த அந்த வரமானது கரையில் வந்து மோதிக் கொண்டிருக்கும் இங்கே வெளியேயிருக்கும் இந்த முழு சமுத்திரத்தைப் போன்றதாகும். நம்முடைய சகோதரனிடத்திலுள்ள வரமானது அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தண்ணீரைப் போன்று இருக்கும். ஆனால் அந்த ஸ்பூனிலுள்ள தண்ணீரில் இருக்கும் அந்த இரசாயனமானது, அந்த முழு சமுத்திரத்திலும் இருக்கும் அதே வகையான இரசாயனமாகும்' என்றார். அது சரியே. நான்-நான் நானே பெலவீனமடைந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. பரிபூரணமாக விடுதலையான அம்மனிதன் அங்கே இருந்தான். 42இப்பொழுது, அது நூற்றுக்கணக்கான தடவைகள் சம்பவித்து விட்டது. அதற்கு சாட்சியாக, மற்ற கூட்டங்களில் இருந்த ஜனங்கள் இந்தக் கட்டிடத்தில் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் சாட்சியாக முடிந்து, அது சத்தியம் என்று கூறுகிற வேறு கூட்டங்களில் இருந்த நண்பர்கள் இங்கே எனக்கு இருக்கிறார்களா? நீங்கள் இங்கே இருப்பீர்களானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது, நீங்கள் காணலாம். வேதாகமம், 'இரண்டு அல்லது அதற்கு அதிகமானோரின் சாட்சிகளுடைய வாக்கினாலே...' என்று கூறுகிறது. 43இப்பொழுது, இங்கே லூயிவில்லிலும் உங்களால் அதே காரியத்தை கொண்டிருக்க முடியும். பரிபூரணமாக சுகமடையாமல் இங்கிருந்து எவருமே போக வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரையும் மேடையில் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் இதன் மூலமாக நன்மைகளை அடைய முடியும். தேவன் தேவனாக இருக்கிறார் என்று தம்மைத்தாமே அவரால் இங்கே நிரூபிக்கக் கூடுமானால், என்ன... சத்தியம் என்று நான் கூறியிருப்பவைகளை அவர் உறுதிப்படுத்தியிருப்பாரென்றால், தேவனை விசுவாசியுங்கள். அதன்பிறகு உங்கள் விசுவாசத்தின் பேரில் கிரியை நடப்பியுங்கள், ஜீவிக்கிற கிரியைகளாக உங்களுடைய விசுவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள், அப்படியானால் தேவன் சரியாக அங்கேயே வந்து உங்கள் மேல் கிரியை செய்து, உங்களை சுகப்படுத்துவார். 44இப்பொழுது, ஹாட் ஸ்பிரிங்ஸ், அது... அது லிட்டில் ராக்கில் என்று நம்புகிறேன். ஒரு இரவில் தெருவில் கார்கள் வர முடியாத அளவுக்கு ஆம்புலன்ஸ்கள் மிகவும் பெரும் எண்ணிக்கையில் இருந்தன. அவைகளை அந்த மூலையை விட்டு அப்பால் வைக்கும்படிக்கு அங்கே போலீஸைக் கொண்டு வர வேண்டியதாய் இருந்தது, அது ஹாட்...-ல் கோட்டைக்கு கீழாக இருந்தது. அது ராக்...-ல், ஆர்கன்ஸாஸிலுள்ள லிட்டில் ராக்கில் நடந்தது. சங்கை. திரு. பிரௌன் அவர்கள் அங்கேயிருந்த மேய்ப்பர்களில் ஒருவராக இருந்தார். இந்த சாட்சியை நீங்கள் பெற விரும்புவீர்களானால், சங்கை. G. H. பிரௌன், 505 விக்டரி தெரு, லிட்டில் ராக், ஆர்கன்ஸாஸ் (என்ற முகவரிக்கு) எழுதுங்கள், மேலும் இதைக் கவனியுங்கள். பிசாசின் வல்லமையைக் குறித்து பேசுகிறீர்கள்... நான் அப்படியே... அது ஏறக்குறைய என்னுடைய நான்காவது அல்லது ஐந்தாவது கூட்டமாக இருந்தது, அது 'long ஏறக்குறைய 11 மணியாக இருந்தது; அது என்னுடைய கையானது மிகவுமாக மரத்துப் போன பிறகு நடந்தது. சில சமயங்களில், நான் வீட்டிற்குப் போகும் போது, என்னுடைய கையில் மறுபடியும் திரும்ப சரீரபிரகாராமான உணர்ச்சியைக் கொண்டு வர, என்னுடைய கையை செங்குத்தாக வைத்து, அதில் சற்று ஏறக்குறைய அரை மணி நேரங்கள் சூடான தண்ணீரை ஊற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய அளவுக்கு என்னுடைய கை மிகவும் மரத்துப் போய் விடுகிறது. அங்கே ஒரு கைக்கடிகாரம் இருக்கிறது; நான் அங்கே அதை அணிந்து கொண்டு, நான் ஒரு மனிதனுடைய கரங்களைப் பிடித்தேன், அது அந்த கைக்கடிகாரத்தை செயலற்று போகும்படி செய்து, இயங்காமல் நிறுத்தி விட்டது. நான் இப்பொழுது ஒரு லாங்கின்ஸ் வாட்சை வைத்திருக்கிறேன், அது இப்பொழுது தான் தொழிற்சாலையிலிருந்து வந்திருக்கிறது. நான் அதைப் பிடித்தேன். என்ன சரீர பிரகாரமான எதிர் விளைவோ, அல்லது எந்த இயந்திரமயமான காரியம் அதைச் செய்கிறதோ எனக்குத் தெரியவில்லை. 45ஆனால் திரு. பிரௌன் அவர்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, இந்த அரங்கத்தின் அடித்தளத்திற்குள் இறங்கி வாருங்கள். நீர் ஒருக்காலும் அதைப் போன்ற எதையும் கண்டிராத ஒரு நோயாளி இங்கே என்னிடம் இருக்கிறாள்' என்றார். நல்லது, நான் ஓய்வாக இருந்த சமயத்தில் அங்கு இறங்கிச் சென்றேன். நான் சில பயங்கரமான காட்சிகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் அதைப் போன்று மிகவும் பயங்கரமான எதையும் நான் ஒருபோதும் கண்டதேயில்லை. பைத்தியம் பிடித்த வாலிப ஸ்திரீகள், மலஜலம் கழிக்கப்பதற்கு வைத்திருக்கும் பாத்திரங்களை எடுத்து, தங்கள் முகத்தின் மேல் பூசிக் கொள்ளும் இடங்களில் பைத்தியம் பிடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளுக்குள் நான் போயிருக்கிறேன். நான் சில பயங்கரமான காரியங்களைக் கண்டிருக்கிறேன், ஆனால் இதைப் போன்று எதையும் ஒருபோதும் கண்டதில்லை. ஏறக்குறைய முப்பது, முப்பத்தைந்து வயதான பலமாக தோற்றமளிக்கிற ஒரு பெண்மணி தரையில் படுத்திருந்தாள். அவளுடைய-அவளுடைய கால்கள் இவ்விதமாக மேலே நீட்டிக் கொண்டிருந்தது, அவைகளில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. 46அங்கே அந்தப் படிகளின் மேல் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான், அவர் ஒரு நல்ல பழைய ஆர்கன்ஸாஸ் சகோதரன், அவர் ஒரு ஜோடி தளர்த்தியான மேலாடையையும் ஒரு நீல நிற சட்டையையும் அணிந்திருந்தார். நண்பர்களே, சிலசமயங்களில் மிகச்சிறந்த இருதயங்கள் அதற்குக் கீழே அடித்துக் கொண்டிருக்கும் என்று நான் கூறுவேன். அது சரியே. அது உண்மை என்று நான் நம்புகிறேன். நான்-நான் பாசாங்கு செய்து நடிக்கும் எதையும் விரும்புவதில்லை. தேவனால் இரட்சிக்கப்பட்டு இருமுறை பிறந்த, உண்மையான பழைமை நாகரீகமான மனிதர்களையும் பெண்களையும் நான்-நான் விரும்புகிறேன் (அது சரியே.). அவர் தன்னுடைய பழைய மங்கிப் போன நிறமாகத் தோற்றமளிக்கிற வஸ்திரங்களை உடுத்தினவராய், அங்கே நின்று கொண்டிருந்தார். நான் கூறினேன்... நான் கீழே இறங்கி நடந்து சென்றேன். நான், 'வணக்கம்' என்றேன். அவர், 'மாலை வணக்கம். நீங்கள் தான் சகோதரன் பிரன்ஹாமா?' என்றார். நான், 'ஆம், ஐயா' என்றேன். 'நீர் சகோதரன் பிரன்ஹாம் தான் என்று நினைத்தேன்' என்றார். PA சிஸ்டம் அதையும் கூட அங்கே கீழே எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அவர்களிடம் ஒரு கூட்டம் பைத்தியம் பிடித்தவர்கள் ஒரு புறம் இருந்தனர். 47ஆனால் அவர்களால் இந்தப் பெண்மணியை எவரோடும் வைத்திருக்க முடியவில்லை. அவளை உள்ளே கொண்டு வர ஏறக்குறைய எட்டு அல்லது பத்து மனிதர்கள் தேவைப்பட்டனர். அவர்களால் அவளை ஒரு ஆம்புலன்சில் வைத்து கொண்டு வர முடியவில்லை. அவர்கள் அவளை ஒரு ஆம்புலன்ஸில் வைக்கவில்லை. அவர்கள் யாரோ ஒருவரை அங்கே மேலே ஒரு காரில் அனுப்பினார்கள், அவள் கண்ணாடிகள் எல்லாவற்றையும் காரை விட்டு உதைத்துத் தள்ளினாள், அந்த மனிதர்கள் அவளை அந்தக் காரில் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவள் அங்கே தன்னுடைய முதுகிலே படுத்துக் கொண்டிருந்தாள். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அவளுக்கு நேரிட்ட மாதவிடாய்க்காக மருத்துவர் அவளுக்குப் போட்ட சில மருந்தூசிகள் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தது. அங்கே அவள் தன்னுடைய முதுகின் மேல் படுத்துக் கொண்டிருந்தாள். நான், 'நல்லது, நான் வெளியே நடந்து சென்று, எந்த அதிர்வுகளாவது நான் உணருகிறேனா என்று பார்ப்பேன்' என்றேன். அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அங்கே வெளியே போகாதீர்கள். அவள் உம்மைக் கொன்று போடுவாள்' என்றார். நான், 'ஓ, நான் அவ்வாறு நினைக்கவில்லை' என்று அவ்விதமாகக் கூறினேன். நான் வெளியே நடந்து சென்றேன். அவள் அங்கே படுத்துக் கொண்டு, என்னைப் பார்த்துக் கொண்டு, ஒருவிதமாக தன்னுடைய கண்களை சிமிட்டிக் கொண்டு, முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான், 'மாலை வணக்கம்' என்றேன். அவள் ஒரு வார்த்தையும் கூறவில்லை. நான் அவளுடைய கரத்தைப் பிடித்து, 'மாலை வணக்கம்' என்றேன். அவர், 'அவளுடைய சொந்த பெயர் கூட அவளுக்குத் தெரியவில்லை, சகோதரன் பிரன்ஹாமே. அவளுக்கு இரண்டு வருடங்களாக அது தெரியாதிருக்கிறது' என்றார். 48நான் அவளுடைய கரத்தைப் பிடித்தேன். தேவனுடைய ஆசீர்வாதத்தின் மூலமே நான் பாதுகாப்பாய் இருக்க நேர்ந்தது. அவள் இவ்விதமாகத் திடீரென்று இரண்டு கைகளாலும் என்னை வெட்டி இழுத்தாள், அவள் அநேகமாக என்னுடைய சரீரத்தின் எலும்புகளை உடைத்து விட்டிருப்பாள். நான் என்னுடைய காலை வெளியே விட்டேன், அவளுடைய நெஞ்சில் பட்டது. அவள் அப்படியே என்னை கீழே இழுத்தாள். நான் அவளிடமிருந்து சட்டென இழுத்துக் கொண்டேன். அப்போது நான் படிகளில் சென்று விடலாம் என்று அவளை விட்டு ஓடிய போது, இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத ஒரு காட்சியைக் கண்டேன். அந்தப் பெண்மணியின் இரண்டு கைகால்களும் மேலே இவ்விதமாக நீட்டினபடி இருக்க, அவளுடைய முதுகிலேயே, ஒரு பாம்பைப் போன்று என்னைத் துரத்தி வந்தாள். தரையில் அவ்விதமாக அவள் ஊர்ந்து வரும் சத்தத்தை நீங்கள் கேட்க முடியும். இப்பொழுது, அதுதான் பிசாசு. அது வேறு என்று நீங்கள் கூறலாம், நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அவ்வாறு கூறலாம், ஆனால் அந்தப் பெண் பிசாசினால் கட்டப்பட்டிருந்தாள். அவள் ஒரு பாம்பைப் போல அவளுடைய முதுகின் மேல் என்னை நோக்கி வந்தாள், அவள் அங்கே எழுந்து, இவ்விதம் ஒரு புறமாக தரையில் மோதி விட்டு, சுற்றித் திரும்பி, அவளுடைய பெரிய பலமான கைகால்களை மேலே அதை நோக்கி வைத்துக் கொண்டு... அவ்விதமாக உதைத்தாள். அங்கே ஒரு பெஞ்ச் இருந்தது. அவள் தன்னுடைய தலையால் அதில் மோதினாள்; அவளுடைய தலைப்பகுதியிலிருந்து இரத்தம் வடிந்தது. அவள் அதில் ஒரு பகுதியில் மோதினாள். அவள் அதைத் தன்னுடைய கையில் பிடித்து, அவளுடைய கணவனை நோக்கி அதை எறிந்தாள், அது சுவரில் பட்டது. சுவரிலிருந்து சுண்ணாம்பு பூச்சு கீழே வீழுந்தது, அங்கே அவள் அவ்வளவு பயங்கரமாக அதை எறிந்திருந்தாள்... அவள் வெறிபிடித்தவளாய் அநேகமாக அவளுடைய பலத்தைப் போன்று 20 மடங்கு பலம் உடையவளாய் இருந்தாள்... அங்கே அந்தப் பெரிய... அவள் எப்படியும், ஒரு நல்ல அளவுடைய பலமான ஸ்திரீயாக இருந்தாள். 49அதன்பிறகு அவள், 'இ-இ-இ-இ-இ-இ, இஇஇஇஇஇ' என்று அதைப் போன்று மிகவும் வினோமான சத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கி, போய்க் கொண்டிருந்தாள். நான் அவளை நோக்கிப் பார்த்து, நான், 'ஏன், நான் (இதைப் போன்று) ...எதையும் ஒருபோதும் கண்டதேயில்லை. அவ்விதமாகக் கட்டப்பட்டிருக்கிற ஒரு பரிதாபமான பெண்ணிடம் தேவன் இரக்கமாயிருப்பாராக' என்று எண்ணினேன். அந்த மனிதர் அழத் தொடங்கினார். அவர் நடந்து வந்து, தமது கரங்களை சுற்றிலும் போட்டு, அவருடைய கைகளை என்னைச் சுற்றிலும் போட்டு, 'சகோதரன் பிரன்ஹாமே, இப்பொழுது அங்கே எந்த அதிர்வும் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? நான் எங்கே போகப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை' என்றார். அவர் அப்படியே உடைக்கப்பட்டு, அழுது கொண்டிருந்தார். அவர், 'அவளுக்கு வீட்டில் ஐந்து சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். நான்-நான்... அவள் ஒரு நல்ல பெண்மணியாக இருந்தாள். அவள் இந்தப் பழைய மண்ணாங்கட்டிகளை உடைத்து சமன்செய்து, பருத்தி பயிர்களை வளர்க்கும்படி எனக்கு உதவி செய்தாள். அவள் வியாதிப்பட்ட போது, என்னால் செய்யக் கூடுமான யாவற்றையும் நான் செய்தேன். நான்-நான் என்னுடைய பண்ணையை விற்று விட்டேன். சகோதரன் பிரன்ஹாமே, அவளை இங்கே கொண்டு வர, ஒரு காரியம் தான் எனக்கு மீதியாயிருந்தது, அது ஒரு ஜோடி கோவேறு கழுதைகள். இவளை 200 மைல்கள் பிரயாணம் பண்ணி, இவளை இங்கே கொண்டு வரும்படியாக அச்சகோதரனை ஏற்பாடு செய்ய அவைகளை விற்று விட்டேன். இப்பொழுது அவள் அந்தக் காரின் கண்ணாடிகளை உதைத்து விட்டிருந்தாள், ஆகையால் தான் அவளுடைய கைகால்களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அவள் இரண்டு வருடங்களாக அவளுடைய முதுகை விட்டு அகலவேயில்லை, அவளுக்கு அவளுடைய சொந்த பெயர் கூடத் தெரியாது' என்றார். நான், 'நல்லது, சகோதரனே, நிச்சயமாக, தேவனால் அவளைச் சுகமாக்க முடியும்' என்றேன். 50ஏறக்குறைய அந்நேரத்தில் அவள் சுற்றித் திரும்பினாள். அவள், 'வில்லியம் பிரன்ஹாம், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தான் அவளை இங்கே கொண்டு வந்தேன்' என்றாள். அவர், 'ஏன்...' என்றார். நான், 'அது அவளல்ல. பிசாசு தான் அவளிடமிருந்து பேசிக் கொண்டிருக்கிறான்' என்றேன். அது சரியே. அவைகள் அடையாளம் கண்டு கொள்கின்றன. அவைகளுக்குத் தெரியும். அவர், 'ஏன், சகோதரன் பிரன்ஹாமே, இரண்டு வருடங்களில் அவள் பேசின முதல் வார்த்தை இதுதான்' என்றார். நான், 'பிசாசு அவளுடைய உதடுகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறான், அப்படியே லேகியோனுடைய காரியத்தைப் போல' என்றேன். அவள் அவ்விதமாக என்னை நோக்கி ஊர்ந்து வந்து கொண்டே, 'என்னோடு உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்றாள், அவ்விதமாக ஊர்ந்து கொண்டே. நான், 'சகோதரனே, அந்த தூதனானவர் வருகிறதைக் குறித்து நான் கூறுவதாக நீர் கேள்விப்பட்டிருக்கிற அந்த விவரத்தை நீர் விசுவாசிக்கிறீரா?' என்று கேட்டேன். 51அவர், 'என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறேன்' என்றார், அவர் தமது கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டவாறு அவ்வாறு கூறினார். நான் அந்த மூலையிலிருந்த படிக்கு நடந்து சென்று, என்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபம் பண்ணினேன். நான், 'தேவனே, இந்த பரிதாபமான பெண்ணை நோக்கிப் பாரும், ஐந்து சிறு அப்பாவிகளான பிள்ளைகள் தாயில்லாமல், வீட்டில் இருக்கிறார்கள், அவைகளில் ஒன்று பால்குடிக்கும் கைக்குழந்தை. என்ன சம்விக்க முடியும்? ஓ தேவனே, இரக்கமாயிரும்' என்றேன். (அப்போது) கர்த்தருடைய ஆவியானவர் வந்தார். அந்தப் பெண்ணை விட்டு விலகும்படியாக நான் அந்தப் பிசாசை அதிகாரப்பூர்வமாகக் கேட்டேன். பிறகு சுற்றிலும் பின்னால் திரும்பி, நான், 'இப்பொழுது நீர் அதை விசுவாசிக்கிறீரா?' என்று கேட்டேன். அவர், 'என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். சகோதரன் பிரன்ஹாமே, நான் அவளை என்ன செய்ய வேண்டும்?' என்றார். நான், 'அவளைத் திரும்ப கொண்டு செல்லுங்கள். அவளைத் திரும்ப அந்த மருத்துவ இல்லத்திற்கு கொண்டு போங்கள். நான் உம்மிடம் கூறியிருக்கிற ஒன்றையும் நீர் சந்தேகிக்காமல் இருப்பீரென்றால், என்ன சம்பவிக்கும் என்று கவனித்துப் பாரும்' என்றேன். 52அதற்குப் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து, நான் ஆர்கன்ஸாஸிலுள்ள ஜோன்ஸ்போரோவில் இருந்தேன், அங்கே அநேக காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருந்தன. அந்தப் பட்டணத்திற்குள் கொஞ்சம் 28,000 ஜனங்கள் கூடியிருந்தனர். நான் பேசிக் கொண்டிருந்தேன், நான் பார்த்த போது, ஏதோவொரு ஸ்திரீ தள்ளிக் கொண்டோ அல்லது தங்கள் கரங்களை என்னை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தாள். அவள், 'சகோதரன் பிரன்ஹாமே, என்னை அடையாளம் தெரியவில்லையா?' என்று கேட்டாள். நான், 'இல்லை, அம்மணி' என்றேன். அவள் அவ்விதமாக வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தாள், மற்றும் ஒவ்வொருவருமே... அவள், 'நான்... நீங்கள் எல்லாரும், நீங்கள் யாவரும் என்னை மன்னியுங்கள். நான் உம்மைக் காண விரும்பினேன்' என்றாள். யாரோ ஒருவர் அங்கே சிரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன், அது அவளுடைய கணவன். அவள் அங்கே சுகத்தோடும் அவளுடைய சரியான மனநிலையிலும், அவளால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பரிபூரணமாக அவளுடைய ஐந்து சிறிய பிள்ளைகளை உடையவளாய் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் அவளைத் திரும்பக் கொண்டு சென்றிருந்தனர். திரும்பிப் போகும் போது, அவள் ஒருமுறை (கூட) தன்னுடைய காலால் அந்தக் காரை உதைக்கவில்லை. அவர்கள் அவளைப் பின்னாலிருந்த மெத்தைப் போன்ற பொருள் இருந்த சிறிய அறையில் வைத்திருந்தனர். இரண்டாவது நாள் காலையில், அவளுக்கு உணவு கொடுக்க அவர்கள் உள்ளே சென்றனர், அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். நான்காவது, மூன்றாவது அல்லது நான்காவது நாள் காலையில், ஒரு சுகமடைந்த நபராக அவர்கள் அவளை மருத்துவமனையிலிருந்து போகும்படி செய்து, அவளை வீட்டிற்கு அவளுடைய பிள்ளைகளிடம் அனுப்பி வைத்தனர். 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.' 53கவனியுங்கள், நண்பர்களே, சிலசமயங்களில் ஊழியக்காரர்களும் கிறிஸ்தவர்களும் அடையாளம் கண்டு கொள்வதற்கு முன்பே பிசாசுகள் தேவனுடைய வல்லமையை அடையாளம் கண்டு கொள்கின்றன. அது உங்களுக்குத் தெரியுமா? அநேக நேரங்களில்... வேதத்தை வாசித்துப் பாருங்கள். ஆசாரியன், 'ஓ, அவர் பெயல்செபூல்' என்று கூறின போது. பிசாசோ, 'நீர் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய தேவ குமாரன் என்று நாங்கள் அறிவோம்' என்றன. அது சரிதானா? அந்த ஊழியக்காரர்கள், பவுலையும் சீலாவையும் பார்த்து, அவர்கள் ஆள்மாறாட்டக்காரர்கள் என்று கூறின போது, அந்தச் சிறு வயதான குறிசொல்லுகிறவள் (fortuneteller), அவர்கள் ஜீவ வழியைக் கொண்டிருக்கிற தேவனுடைய மனுஷர்கள் என்று கூறினதை நினைவுகூருங்கள். 54நான் தவறாக இல்லை என்றால், அரிசோனாவிலுள்ள போனிக்ஸிலிருந்து வந்திருக்கும் சங்கை. கூப்பர் அவர்கள் கட்டிடத்தின் பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள், அவர் அந்த வாக்குமூலம் உண்மை என்று நிரூபித்துக் காட்ட முடியும். சங்கை. கூப்பர் அவர்களே, நீங்கள் அன்றிரவு அங்கே இருந்தீர்களா? அது சம்பவித்த போது, அங்கேயிருந்த ஒரு மனிதர் அதோ இருக்கிறார். சங்கை. G. H. பிரௌன், 505 விக்டரி தெரு, லிட்டில் ராக், ஆர்கன்ஸாஸ் என்ற (முகவரிக்கு) எழுதி, அந்த சாட்சிக்காக அவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர்... உங்களுக்கு அனுப்பட்டும். அந்த மருத்துவ இல்லம் அதைக் குறித்து சாட்சி கொடுக்கட்டும். அது ஆயிரக்கணக்கான காரியங்களில் ஒன்று தான். 55அப்படியே இன்னும் ஒருவிசை. இதற்குப் பிறகு அந்த நாளில், கர்த்தருடைய தூதனானவர் கட்டிடத்திற்குள் வந்தார்... அதன்பிறகு நான் ஜெப வரிசையைத் தொடங்குவேன். நான்-நான் எல் டொராடோவில் இருந்தேன். நான் அங்கே குதிரை பந்தயம் நடக்கும் பந்தைய பாதையில் ஏறக்குறைய இரண்டு இரவுகள் இருக்க வேண்டியதாய் இருந்தது, இங்கிருந்து புறப்பட்ட உடனே, நான் ஷ்ரிவ்போர்ட்டுக்குப் போகிறேன், அதன்பிறகு, எல் டோராடோவுக்குப் போய், அவ்வாறு தொடர்ந்து செல்கிறேன். நான்-நான் ஒரு சிறு சபையில் இருந்தேன். அவர்கள், 'நீங்கள் இந்த சபையில் பேச வருவீர்களானால்...' என்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் பட்டணத்தில் நிரம்பியிருந்தனர். இந்த காட்சியின் போது, அந்த நிருபரும், அந்த ஓட்டலின் காப்பாளரும், இருவருமே ஒரே சமயத்தில் மனமாற்றமடைந்தனர். அவர்கள் இயேசுவை எவ்வாறு கண்டுகொள்வது என்று அறிய விரும்பினார்கள். அவர்கள் வருடக்கணக்காக சபைகளில் அங்கத்தினர்களாக இருந்து வருகிறார்கள், ஆனால் அவர்கள் தேவனுடைய கிரியையையும், தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் அதனோடு செய்து கொண்டிருந்ததையும் கண்ட போது... அவர்கள் என்னை ஒரு-ஒரு-ஒரு சிறு அறையில் வைத்திருந்தனர். நான் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தேன். 56நான் வெளியே சென்ற போது, அங்கே நான்கு மனிதர்கள் என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டு, வாசலுக்கு வெளியே (வரத்) தெடங்கினார்கள். ஜனங்கள் அங்கே மழையில் நின்று கொண்டு, தங்கள் அன்பார்ந்தவர்களின் மேலாகவும், ஒவ்வொன்றின் மேலாகவும் கான்வாஸ் துணியைப் பிடித்துக் கொண்டு, நகர வட்டாரங்களில் காத்துக் கொண்டிருந்தனர்; போவதற்கு இடமேயில்லை, இல்லை, உள்ளே வரக்கூட முடியவில்லை, எங்கும் இடமேயில்லை, தனிப்பட்டோரின் வீடுகளும் இல்லை. அவர்கள் படுத்து கிடக்க செய்தித்தாள்களை வைத்திருந்தனர், மழைத்தூறல் அவர்கள் மேல் பெய்து கொண்டிருக்கும் போது, கான்வாஸ் துணியைப் பிடித்துக் கொண்டிருந்தனர், சிறு முடமான பிள்ளைகள், ஜெப வரிசையில் வரும்படி முயற்சிக்க தங்களுடைய சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். சகோதரனே, அதுதான் தேவனை நேசிக்கும் ஜனங்கள் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். அது சரியே. நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன். அநேக குறிப்பிடத்தக்க காரியங்களும் மர்மமான ஆவிக்குரிய காரியங்களும் வரிசையினூடாக சம்பவித்திருக்கின்றன. நான் அந்தக் கட்டிடத்திலிருந்து ஆரம்பித்தேன், ஜனங்கள் அழுது கொண்டும், நெருக்கிக் கொண்டும், இவ்விதமாக நாங்கள் இருந்த இடத்திற்கு வர முயற்சித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் அந்தக் காரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஜெப வரிசையைக் கொண்டிருந்தனர். 57யாரோ ஒருவர், 'இரக்கம். இரக்கம். இரக்கம்' என்று உரத்த சத்தமிட்டுக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். நான் சுற்று முற்றும் நோக்கிப் பார்த்தேன். நான் எங்கோ ஓரிடத்திலிருந்து அதைக் கேட்க முடிந்தது, என் இருதயத்தில் ஏதோவொன்று அப்படியே துள்ளிக் கொண்டிருப்பது போன்று காணப்பட்டது. நான் நோக்கிப் பார்த்தேன். வழியில் ஒருபுறமாக நின்று கொண்டிருந்தது... ஆர்கன்ஸாஸில் அவர்களுக்கு ஒரு-ஒரு சட்டம் உண்டு: கறுப்பர்களும் வெள்ளையர்களும் ஒன்றாக இருக்க முடியாது. ஒரு கறுப்பின மனிதன் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தான், அப்படியே தன்னுடைய கரங்களில் ஒரு சிறு தொப்பியைப் பிடித்துக் கொண்டு, அங்கே மழையில் நின்று கொண்டிருந்தான், மழை அவனுடைய முகத்தில் பெய்து கொண்டிருந்தது. அவனுடைய மனைவியோ, 'இரக்கம். இரக்கம். இரக்கம்' என்று உரத்த சத்தமிட்டுக் கொண்டிருந்தாள். நான் குருடாயிருந்த வயதான பர்த்திமேயுவைக் குறித்து சிந்தித்தேன். நான் தொடர்ந்து போகத் தொடங்கினேன். அதைச் செய்யக் கூடாது என்று அப்படியே என்னிடம் ஏதோவொன்று கூறிக் கொண்டிருந்ததைப் போன்று காணப்பட்டது. அவர்களில் நூற்றுக்கணக்கானோர், நெருக்கிக் கொண்டிருந்தனர், நான், 'அந்த கறுப்பின மனிதன் இருக்கும் இடத்திற்கு நான் செல்ல விரும்புகிறேன்' என்று கூறினேன். அவர்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் அதைச் செய்ய முடியாது' என்றனர். அவர்களில் இரண்டு பேர் காவலர்களாக இருந்தனர். அவர்கள், 'நீங்கள் ஒரு இனப்பிரிவு கலகத்தை சரியாக இப்பொழுதே தொடங்கி விடுவீர்கள்' என்றனர். 'நீங்கள் அதைச் செய்ய முடியாது' என்றனர். நானோ, 'ஆனால் அவன் இருக்கும் இடத்திற்கு நான் போக வேண்டுமென்று கர்த்தர் சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்றேன். 58நான் அப்படியே ஒரு புறத்தை தள்ளி விலக்கி விட்டு, அங்கே போனேன். அவர்கள் ஒரு சிறு வளையத்தை உருவாக்கிக் கொண்டனர். நான் மேலே வந்த போது, அவள் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்; அந்த வயதான மனைவி, அவள், 'தேனே, இதோ பார்சன் வருகிறார்' என்றாள். என்னே, என்னே. அவன் இருந்த இடத்திற்கு கொஞ்சம் அருகில் நெருங்கினேன்... அவன், 'பார்சன் பிரன்ஹாம் அவர்களே, இது நீங்களா?' என்றான். நான், 'ஆம், ஐயா' என்றேன். அவன் தன்னுடைய கரத்தால் என்னுடைய முகத்தைத் தொட்டுப் பார்க்கத் துவங்கினான். அவன், 'பார்சன், சிறிது நேரம் என்னுடைய கதையைக் கேட்பீர்களா?' என்றான். நான், 'சரி, ஐயா' என்றேன். 59அவன், 'பார்சன், என் வயதான தாயார், ஒரு நல்ல பக்தி வாய்ந்த பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள் தன்னுடைய முழு ஜீவியத்திலும் ஒரு பொய்யும் என்னிடம் ஒருபோதும் கூறினதில்லை. அவர்கள் மரித்து இப்பொழுது சுமார் 10 வருடங்கள் ஆகி விட்டது. என்னுடைய முழு ஜீவியத்திலும் நான் உம்மைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டது கூட இல்லை. நான் இங்கிருந்து சுமார் 100 மைல்கள் தூரத்தில் வசிக்கிறேன். சென்ற இரவு... நான் இப்பொழுது அநேக வருடங்களாக குருடனாக இருந்து வருகிறேன். சென்ற இரவு, நான் தூக்கத்தை விட்டு விழித்து, என் படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன், என் வயதான தாயார் அங்கே நின்றிருந்தார்கள். அவர்கள், 'தேனே, பிள்ளையே, நீ ஆர்கன்ஸாஸிலுள்ள எல் டொராடோவிற்கு போய், பிரன்ஹாம் என்ற பெயர் கொண்ட யாரோ ஒருவரைக் குறித்து கேள். கர்த்தர் (அவருக்கு) ஒரு தெய்வீக சுகமளிக்கும் வரத்தைக் கொடுத்திருக்கிறார். நீ உன்னுடைய பார்வையைப் பெற்றுக் கொள்வாய்' என்றார்கள்' என்று கூறினான். ஓ, என்னே, என்னுடைய இருதயம் அந்த அளவு பெரிதானது போல உணர்ந்தேன். தேவன் பேசிக் கொண்டிருந்தார் என்பதைக் கண்டு கொண்டேன். மனிதன் அதை விசுவாசிக்காமல் போனால், தேவன் இருதயத்தில் உத்தமமாய் இருப்பவர்களுக்கு ஏதோவொரு வழியில் அதை அறிவிப்பார். அவர் செய்வார். 60நான் அவன் மேல் என் கரங்களை வைத்தேன்; நான், 'சகோதரனே, இந்த தரிசனத்தை உனக்கு அனுப்பியிருக்கிற கர்த்தராகிய இயேசு உன்னைச் சுகமாக்கும்படி இப்பொழுது இங்கே நின்று கொண்டிருக்கிறார்' என்றேன். நான் அவனை விட்டு என்னுடைய கரங்களை எடுத்தேன். அவனுடைய கரத்தைப் பிடித்தேன்; கண்படல நோய் மரித்து விட்டது. அவனுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக விழத் தொடங்கினது. அவன், 'கர்த்தாவே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன்' என்றான். அவள் சொன்னாள், அவனுடைய மனைவி சொன்னாள், 'தேனே, நீங்கள் காண்கிறீர்களா?' என்றாள். அவன், 'ஆம், நான் காண்கிறேன்' என்றான். அவள், 'ஓ, நீங்கள்-நீங்கள் உண்மையாகவே காண்கிறீர்களா, தேனே' என்றாள். அவன், 'ஆம்' என்றான். 'அங்கே ஒரு சிவப்பு நிற கார் இருக்கிறது' என்றான். ஓ, என்னே. அவள் அப்படியே இதைப் போன்று உரத்த சத்தமிடத் தொடங்கினாள். பிறகு அவர்கள் என்னைப் பற்றிப் பிடித்து, காருக்காக வெளியே அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு, ஒரு இரவு, நான் டென்னஸியிலுள்ள மெம்பிஸின் அருகில் ஒரு விமானத்தை விட்டு வெளியே வந்தேன். நான் உள்ளே வரத் தொடங்கினேன்; யாரோ ஒருவர், 'ஹலோ, பார்சன் பிரன்ஹாம்' என்று உரத்த சத்தமிடுவதைக் கேட்டேன். நான் அங்கே சென்றேன். அது யார்? அங்கே அவன் சுகமாகவும், அவனுடைய வேதாகமம் அல்லது எதையும் வாசிக்கக் கூடியவனாகவும் இருந்தான். 61நான், 'ஆச்சரியமாக கிருபை, அதன் தொனி எவ்வளவு இனிமையானது,... ஒரு ஈனனை இரட்சித்தது' என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர் இன்னும் அப்போது இருந்ததைப் போன்றே இன்றிரவும் மாறாதவராக இருக்கிறார். நண்பர்களே, அவர் இங்கே இருக்கிறார். நீங்கள் செய்யும்படிக்கு நான் உங்களிடம் கேட்கும் ஒரே காரியம் என்னவென்றால் நான் உங்களிடம் சத்தியத்தையே கூறியிருக்கிறேன் என்று விசுவாசிப்பது தான். நான் கூறியிருக்கிறதைப் போன்றே செய்யும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையைக் கவனியுங்கள். அது அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், அப்போது சகோதரன் பிரன்ஹாம் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று நீங்கள் கூறுங்கள். அது செய்யப்பட்டால், அப்போது அவருடைய சாட்சிக்காக நீங்கள் தேவனை விசுவாசியுங்கள். நாம் நம்முடைய தலையை வணங்குவோமா? 62எங்கள் பரலோகப் பிதாவே, ஓ, நான் நினைத்துப் பார்க்கிறேன், என்றோ ஒரு நாளில், நாங்கள் பிரயாணத்தின் முடிவிற்கு வந்து, மேலே உமது வீட்டிற்கு வரும்போது, நீர் என்னை உள்ளே விட வேண்டும் என்று ஜெபிக்கிறேன், அப்பொழுது நான் சந்தித்திருக்கிற இந்த அன்பான ஜனங்கள் யாவரோடும் அங்கே எங்கோ ஓரிடத்தில் எனக்கு ஒரு இருக்கையைக் கொண்டிருக்க முடியும். அப்போது நாங்கள் இந்தக் காரியங்களையும், நீர் எங்களுக்காகச் செய்திருக்கிற, எங்களிடமிருக்கிற இந்த மகத்தான காரியங்களைக் குறித்த நினைவுகளையும் எங்களால் பேச முடியும். உம்மைக் காணவும், நீர் அருகாமையில் இருக்கிறீர் என்பதையும், வியாதியோடும் துன்பத்தோடும் இருக்கிற இந்த ஜனங்களை விடுவிக்கும்படியாக நீர் இன்றிரவு இங்கேயிருக்கிறீர் என்பதையும் அறிந்து கொள்ளவும், இங்கே இந்த யாத்ரீக பிரயாணத்தினூடாக, அது எவ்வளவு அற்புதமாயுள்ளது. கர்த்தாவே, இந்த நேரத்தில், இந்த (ஜெப) வரிசையில் வரும்படிக்கு நீர் எவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர் என்பது எனக்குத் தெரியாது. நீரே அதை அறிவீர். யாரோ ஒருவர் இங்கே இருக்கிறார். 50 பேரிடம் ஜெப அட்டைகள் இருக்கின்றன. கர்த்தாவே, நீரே அதை அருளுவீர். வருகிறதற்கு யார் இங்கேயிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீர். கர்த்தாவே, நாங்கள் அதை உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கிறோம். 63இப்பொழுது, ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, ஜெப வரிசையில் வர இயலாமல், தங்களைப் போல துயரத்தோடும் வேதனையோடும் இருக்கிற மற்றவர்களை அவர்கள் பார்த்து, அவர்கள் விடுவிக்கப்படுவதை அவர்கள் காணும் போது, ஓ தேவனே, அவர்களின் விசுவாசம் அதிகரித்து அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ, பிதாவே, இப்பட்டணம் முழுவதும் ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதல் துவங்கி, ஒவ்வொரு சபையும் எழுப்புதல் அடைந்து இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் உள்ளே வந்து, உம்முடைய நேச குமாரன் மேல் அவர்கள் விசுவாசம் கொண்டிருக்கும்படியாக அருளும். அன்பு தேவனே, இதை அருளும். இப்பொழுதும், பிதாவே, நீர் மனிதனின் பலவீனத்தை அறிந்திருக்கிறீர். தேவனுடைய வல்லமையை நாங்கள் அறிந்திருக்கிறோம். என்னுடைய தாயின் கருவிலிருந்து என்னைப் பிரித்தெடுத்து, இந்த ஜீவியத்திற்குள் என்னைக் கொண்டு வந்து, இந்த நோக்கத்திற்காக நியமித்து, இன்றிரவு இங்கே நிற்க வைத்த உம்முடைய தூதனை அனுப்பியருளும். அன்புள்ள தேவனே, இம்மகத்தான வாக்குமூலத்தை ஆயிரக்கணக்கானதும், இலட்சக்கணக்கானதுமான ஜனங்கள் முன்னிலையில் தைரியமாக கூறிக் கொண்டிருக்கையில், நீர் இதுவரையிலும் ஒருபோதும் தவறிப் போனதே கிடையாது. இன்றிரவும் நீர் எங்களிடத்தில் தவறுவதில்லை என்றும், ஆனால் இன்றிரவு நீர் இருதயத்தின் ஒவ்வொரு இரகசிய பாவத்தையும் ஜனங்களிடம் கூறி, அவர்களைக் கட்டி வைத்திருக்கிற பிசாசுகளை, அவர்களுடைய வியாதிகளை அவர்களிடம் கூறும்படி நீர் அருளுவீர் என்பதை நான் அறிவேன். ஒவ்வொருவரையும் விடுவிப்பீர், அவர்களை விடுவிக்க மாட்டீரா, பிதாவே? ஏனென்றால் நாங்கள் உம்மை நம்பி, உம்மை நேசித்து, உம்மை விசுவாசித்து, உமது மகிமைக்காக உம்முடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். இப்பொழுதும், பிதாவே, உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளும், இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 64சரி, இப்பொழுது ஜெப வரிசையின் மேலாளர். (ஒரு சகோதரன் ஒலிப்பெருக்கியிடம் வந்து, 'ஜெப அட்டைகள் B-85லிருந்து, B-100 வரை உடையவர்கள் எனக்குத் தேவை, மேடை படிக்கட்டுகளில், என்னுடைய வலது புறத்திலும், உங்கள் இடது புறத்திலும், உங்களுடைய எண் இருக்கிறபடி, வரிசையில் வந்து நில்லுங்கள்: B-85லிருந்து, B-100 வரை. மற்ற ஒவ்வொருவரும் உட்கார்ந்தவண்ணமாக இருங்கள்' என்று கூறுகிறார் - ஆசிரியர்.) 65சொல்லலாம், அவர் ஜனங்களை வரிசையில் கொண்டு வருகையில், இங்கேயுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்... நாங்கள் இதைக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், நீங்கள் கட்டாயம் பயபக்தியாய் இருந்தாக வேண்டும். நாங்கள் பொறுப்பல்ல... நான் ஒவ்வொரு இரவும் நடை முறை ஒழுங்காக இதைக் கூற வேண்டியிருக்கிறது. கூட்டத்தில் இருக்கும் குற்றம் கண்டுபிடிக்கும் எவருக்கும் நான் பொறுப்பல்ல. இந்தக் காரியங்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு போகின்றன, குறிப்பாக வலிப்பு நோயும் அவ்விதமான மற்ற வியாதிகளும். ஜனங்கள் கூட்டத்திற்கு பரிபூரண ஆரோக்கியத்தோடு வருகிறதை நான் கண்டிருக்கிறேன்; இங்கே ஒரு வலிப்பு நோயாளி உட்கார்ந்து இருக்கிறதைக் காண்பேன், இந்த வலிப்பு நோயாளி சுகமடைந்தவராக வெளியே போவார், அந்த குற்றம் கண்டுபிடிப்பவனோ முடவனாக வெளியே போவான். அநேகமாக ஒரே நேரத்தில் அவர்களில் 28 பேர் உள்ளே வந்து, காக்கை வலிப்பினால் பாதிக்கப்பட்டு தரையில் விழுகிறதை நான் கண்டிருக்கிறேன். அந்த பிசாசின் வல்லமை போகும்படியாக ஒரு இடத்தைக் கண்டுபிடித்து விடும். மேலும், நண்பர்களே, அது வேதாகமமாக இருக்கிறது. அது வேதாகம உபதேசம் என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். இது அப்படியே செயல்பாட்டில் உள்ள புதிய ஏற்பாட்டு சபையாக இருக்கிறது, இல்லையா, நண்பர்களே? விடுவிக்கும்படியான சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை. 66அவர்கள் ஜனங்களை வரிசையில் கொண்டு வருகையில், சக்கர நாற்காலிகளில் இருக்கிறவர்களை நான் எண்ணிப் பார்க்கிறேன், நீங்கள் அவர்களை அப்படியே அசையாமல் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் எப்பொழுதாகிலும்... அவர்கள் உங்களிடம் வந்து பெற்றுக்கொள்வார்கள். உங்கள் அட்டை எண் ஆயத்தமாகும் போது, அவர்கள்-அவர்கள் உங்களை அழைப்பார்கள். 67இப்பொழுது, ஒவ்வொருவரும் இதை நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள்—நீங்கள் ஒவ்வொருவரும் எப்பொழுதுமே இந்தக் கூட்டங்களுக்கு வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் உங்கள் தலையைத் தாழ்த்தும்படி நான் உங்களிடம் கேட்கும்போது, நீங்கள் கட்டாயம் உங்கள் தலையைத் தாழ்த்த வேண்டும். அப்போது நான்... நான் அல்லது இங்கே நின்று கொண்டிருக்கும் சகோதரன் பாஸ்வர்த் அவர்கள், உங்கள் தலையை உயர்த்தலாம் என்று இந்த ஒலிப்பெருக்கியில் கூறுவதை நீங்கள் கேட்கும் மட்டுமாக உங்கள் தலையை உயர்த்தவே வேண்டாம். அதற்கு முன்பாக நீங்கள் உங்கள் தலையை உயர்த்தினால், என்ன சம்பவிக்கிறதோ அதற்கு நான் பொறுப்பல்ல. 68பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும், திரு. ஹுப்பர் அவர்கள், அவர் ஒரு... மற்றொரு கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவரை நான் காண விரும்புகிறேன். அவர் எங்களோடு போனிக்ஸ், அரிசோனாவில் இருந்தார், அங்கே அப்பட்டணத்தின் அதிகாரிகளில் ஒருவன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன், 'நல்லது, அது நல்லதொரு மனோசாஸ்திர காரியம் தான். நான் அப்படியே... அதில் எதுவுமில்லை' என்றான். நான் தொடர்ந்து அம்மனிதனைக் குறித்த உணர்வைக் கொண்டேயிருந்தேன். அவன் பின்னால் என்னுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நான், 'என்னுடைய வலது பக்கத்தில் இருக்கும் யாரோ ஒருவர் தங்கள் தலையை உயர்த்தி வைத்திருக்கிறார்' என்றேன். அவன் தன்னுடைய தலையை தாழ்த்தாமல் இருந்து கொண்டே இருந்தான். உதவிக்காரர்களில் ஒருவர் அவனைப் பார்த்து, 'உங்கள் தலையைத் தாழ்த்தி வைத்திருங்கள்' என்று கூறினார். அவன் பட்டணத்தின் ஒரு அதிகாரியாக இருந்தான், எனவே அவன், 'நான் என்னுடைய தலையைத் தாழ்த்த வேண்டியதில்லை' என்றான். 'சரி.' எனவே அவன் கூறினதை அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள். 69நான் அங்கே ஒரு சிறு பிள்ளையைக் கொண்டிருந்தேன், அவனிடம் ஆடைகளை இணைப்பதற்கான ஒரு குண்டூசி இருந்தது, அது ஒரு கந்தைத் துணியைச் சுற்றிலும் வைத்துப் பொதியப்பட்டிருந்தது, அவன்... முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் வலிப்பு நோயினால் சிறிது நேரம் உணர்விழந்து போய் விட்டான், அந்த வலிப்பு நோய் சரியாக அப்போதே மேடையில் உண்டானது. சிலசமயங்களில் வலிப்பு நோய் வரும்போது, அது அவர்களை சிறிது நேரம் உணர்வில்லாத நிலைக்குத் தள்ளி விடுகிறது. நான், 'சரி, ஐயா, நான் (உம்முடைய தலையைத் தாழ்த்தும்படி) உம்மிடம் கேட்டு விட்டேன். என்னால் செய்ய முடிந்தது அவ்வளவு தான்' என்றேன். நான் ஜெபித்தேன். நான், 'தேவனே, அந்தப் பிள்ளை - அந்த மனிதனின் கீழ்ப்படியாமையின் நிமித்தமாக இந்த அப்பாவி பிள்ளையை வருத்தப்பட அனுமதியாதேயும்' என்றேன். அது அந்தப் பிள்ளையை விட்டு அகன்று போனது. அம்மனிதனோ அப்படியே சிரித்துக் கொண்டு தொடர்ந்து அவ்வாறு இருந்து கொண்டிருந்தான். ஏறக்குறைய இரண்டு நாட்கள் கழித்து, அவன் வந்தான் - அவன் ஒரு வினோதமான உணர்வை உணரத் தொடங்கி, 'ஓ, நான் வெறுமனே அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவு தான், அது வெறுமனே - அது வெறுமனே என்னுடைய கற்பனை தான், நான் நன்றாகத் தான் ஆகிக் கொண்டிருக்கிறேன்' என்றான். அதை (உதறித்தள்ளி விட்டு) அதிலிருந்து அவன் விடுபட முயற்சித்தான். ஒரு நாள், அல்லது அதற்குப் பிறகு, அதிகாரிகள் அவனை பட்டணத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள், அவன் சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தான். ஏறக்குறைய 6 வாரங்கள் கழித்து, அவன்...க்கு வந்தான். 70நான் சார்ல்ஸ் ஃபுல்லரில் ஒரு ஆராதனையை நடத்திக் கொண்டிருந்தேன்... அது லாங் பீச்சில், சார்ல்ஸ் ஃபுல்லர் அவர்களோடு. உங்களில் யாராகிலும் அங்கே இருந்திருந்தால், எத்தனை பேர் அங்கே உள்ளே இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே உள்ளே உண்மையில் ஆயிரக்கணக்கானோர் அந்தக் கடற்கரையில் மேலும் கீழுமாக நின்று கொண்டிருந்தனர், எனவே அவர்கள்... அவனால் உள்ளே வர முடியவில்லை. (பின்னர்) லாஸ் ஏஞ்சலிஸிற்கும் வந்தான், அங்கேயும் அவனால் உள்ளே வர முடியவில்லை. கடைசியாக, மோடஸ்டோவில், மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில், அவனுடைய மனைவி பாதையில் விழுந்தாள். அவனுடைய முகத்தில் தாடி வளர்ந்து, அச்சமூட்டுகிறதாக காணப்பட்டது, அவன் பார்க்க பயங்கரமாக இருந்தான். அங்கே அவன் இருந்தான். 'சகோதரன் பிரன்ஹாமே, ஏதாகிலும் செய்யப்பட்டாக வேண்டும். அவர்-அவர்-அவர் சாப்பிடுவது கூட கிடையாது. எங்களால் வலுக்கட்டாயமாகவும் தண்ணீரை அவருக்குக் கொடுக்க முடியவில்லை' என்று கூறப்பட்டது. ஓ, அவன் பயங்கரமான தோற்றத்தோடு, அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான், அவனுடைய கண்கள் அப்படியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் உள்ளே நடந்து சென்றேன். அவன், 'ஹம்ம்ம்ம்' என்றவாறு இவ்விதமாக என்னிடமிருந்து பின்னால் போகத் துவங்கினான். 71அந்தக் கதவுகளைப் பூட்டு விடும்படி நான் அவர்களிடம் கூறினேன். நாங்கள் களைப்படைந்திருந்தோம், அந்த சனிக்கிழமை இரவில் அங்கே விளையாட்டுக் கழகக் கட்டிடத்தில் மணிக்கணக்காக இருந்து, வியாதியஸ்தரோடு இடைபட்டுக் கொண்டிருந்தோம். ஜனங்களை தூரமாக வைக்கும்படி அந்தக் கதவைப் பூட்டும்படியாக சகோதரன் பிரௌன் அவர்களும் சகோதரன் மூர் அவர்களும் எனக்கிருந்தனர். அவனுடைய மனைவி அந்தப் பாதையில் சேற்றில் விழுந்து, என்னுடைய காற்சட்டையின் கால்களைப் பிடித்துக் கொண்டாள். என்னால் அசையக் கூட முடியவில்லை. அவர்களால் என்னை இழுக்க முடிவில்லை, அவளுடைய கணவனிடம் வரும்படியாக விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டாள். ஏறக்குறைய 45 நிமிடங்கள் கழித்து, அது அவனை விட்டு அகன்று போனது. அவன் என்னைச் சுற்றிலும் தன்னுடைய கரங்களைப் போட்டுக் கொண்டு என்னைக் கட்டி அணைத்துக் கொண்டு, இவ்விதமாக தன்னுடைய தலையில் அவருடைய தொப்பியை வைத்து, என்னுடைய கரத்தைக் குலுக்கி, ஒரு சுகமடைந்த மனிதனாக வீட்டிற்குச் சென்றான். 72நண்பர்களே, நான் உங்களிடம் இதைக் கூறுகிறேன், நான் ஒரு குற்றம் கண்டுபிடிப்பவனாக இருந்தால், நான் அது நடந்து கொண்டிருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்திருக்கக் கூட மாட்டேன். நான் உங்களுக்கு உதவி செய்யவே இங்கிருக்கிறேன், உங்களுக்கு இடையூறு செய்ய அல்ல. நல்லது, இப்பொழுது, அதை சற்று ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தலையைத் தாழ்த்தி வைத்திருந்து, ஏதாகிலும் சம்பவிக்குமானால், அப்போது அதற்காக நான் பொறுப்பாளியாயிருக்கிறேன். இப்பொழுது, நீங்கள் அதைக் குறித்து கதை விட முடியாது, ஏனென்றால் நீங்கள் இங்கே வரும்போது நான் அதை அறிந்து கொள்வேன். ஆனால் இப்பொழுது, நீங்கள் அப்படியே பயபக்கியோடு, ஜெபத்தில் இருங்கள். உங்கள் தலையைத் தாழ்த்தும்படி நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளும் போது, உங்கள் தலையைத் தாழ்த்தி வைத்திருங்கள். நீங்கள் கடந்த இரவில் மிகவும் அன்போடு அதைச் செய்தீர்கள். இன்றிரவும் நீங்கள் அதே காரியத்தைச் செய்யுங்கள், அப்பொழுது எல்லாமும் சரியாக இருக்கும். நீங்கள்... உங்களுடைய (ஜெப) வரிசைகள் ஆயத்தமாகி விட்டனவா. இப்பொழுது சற்று நேரம் நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா. 73பிதாவே, இது ஒரு மகத்தான நேரம் என்பதை நான் உணர்ந்து கொள்ளுகிறேன். நாங்கள் சத்துருவோடு முகமுகமாய் நின்று கொண்டிருக்கும் ஒரு நேரமாக இது இருக்கிறது. இங்கே முடமானவர்களும், துன்பப்படுகிறவர்களும், மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களும் இருக்கிறார்கள். இங்கே இந்த வரிசையில் இதோ நின்று கொண்டிருக்கிற ஜனங்கள், ஒருக்கால் புற்று நோயால் பாதிக்கப்பட்டோ அல்லது ஒருக்கால் இருதயக் கோளாறைக் கொண்டவர்களாகவோ இருக்கலாம். இப்பொழுது அவர்களுக்கு என்ன கோளாறு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உமது ஊழியக்காரனிடம் நீர் கூறுவீர். அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் பரிபூரணமாக சுகப்படுத்தி விடுவிக்க வேண்டும் என்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். சாத்தான் ஒவ்வொரு தடவையும் அழைக்கப்பட்டு, அவன் கூட்டத்தினர் முன்பாக வெளிப்படுவானாக. கர்த்தாவே, ஒவ்வொருவரும் அன்போடும், ஒத்துழைப்போடும், இருந்து, அனைவரும் கிறிஸ்தவர்களாக இருப்பார்களாக. நாங்கள் இன்றிரவு ஒரு மகத்தான கூட்டத்தைக் கொண்டிருப்போமாக. பரிசுத்த ஆவியின் வல்லமை தாமே கட்டிடம் முழுவதும் வீசியடிப்பதாக, இந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் சுகமாவார்களாக, நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். உங்களுக்கு விருப்பமானால், நாம் அப்படியே ஒருவிசை இதைப் பாடுவோம். நம்பிடுவாய்... (உங்களால் கூடுமான மட்டும் ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள்.) யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய். இப்பொழுது நம்மால் இவ்விதமாக இதைப் பாட முடியுமா என்று வியப்படைகிறேன்: இப்பொழுது விசுவாசிக்கிறேன்... எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் அதைப் பாடிக் கொண்டிருக்கையில், உங்கள் கரத்தை சற்று உயர்த்துங்கள். இப்பொழுது விசுவாசிக்கிறேன், (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.) 74(ஒலிநாடாவில் காலியிடம். ஜெப வரிசை துவங்கியிருக்கிறது - ஆசிரியர்.)... ஒரு புற்று நோயையோ அல்லது ஸ்திரீகளுக்குரிய கோளாறையோ உடையவர்களாயிருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள்; அவைகள் இரண்டுமே ஏறக்குறைய ஒன்று போலவே அடிக்கிறது. அது ஸ்திரீகளுக்குரிய கோளாறு, அதுதான் அது. அது சரியா? ஆமாம். அப்படியிருந்த போதிலும் அது ஏறக்குறைய ஒரு புற்று நோயாக இருக்கிறது, அது அதுவாகத்தான் இருக்கிறது. ஜீவியம் உங்களுக்கு ஒரு பூப்படுக்கையைப் (போன்று) இலகுவாய் இருக்கவில்லை, அப்படித்தானே? இல்லை, உங்களுக்கு அநேக பிரச்சனைகள் இருந்தன...